தீர்க்கதரிசன வாக்குத்தத்த செய்தி
“இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே இருக்கிறேன்” (மத்தேயு 28:20) என்று சொன்ன சர்வவல்ல தேவன், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதமும் வசனங்களையும் வசனங்களின் வெளிப்பாடுகளை தந்து நம்மோடு இருப்பதை உறுதிப்படுத்துகின்றார்.
புதிய மாதத்தைக் காணச் செய்த சர்வவல்ல தேவனுக்கு கோடான கோடி மகிமை உண்டாகட்டும்!
புதிய மாதத்தின் வாக்குத்தத்தத்திற்காக தேவ சமூகத்தில் காத்திருக்கும்போது, “உன்னோடேகூட இருந்து, நான் செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும்.” (யாத்திராகமம் 34:10) என்று வாக்குக் கொடுத்துள்ளார். இது தீர்க்கதரிசியாகிய மோசேக்குக் கொடுத்த வாக்குத்தத்தமாகும்.
இன்றைக்கும் உங்களுக்கும் எனக்கும் இதே வாக்குத்தத்தத்தைக் கொடுத்துள்ளார். மோசேயை அழைத்த தேவன் அவனோடு கூட இருந்து பயங்கரமான காரியங்களைச் செய்தார். அதேபோல், உங்களைப் பெயர் சொல்லி அழைத்த தேவன் உங்களோடு இருந்து பெரிய காரியங்களைச் செய்யப் போகின்றார். (ஏசாயா 43:1) நிச்சயமாக இந்த மாதத்தில் செய்வார்.
அந்த நாட்களில் மோசேயோடு இருந்து, எகிப்தியர்களுக்கு முன்பாகவும் இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாகவும் பயங்கரமான காரியங்களைச் செய்த தேவன், உங்களோடு கூட இருந்து என்னென்ன காரியங்களைச் செய்வார், எப்படி செய்வார் என்பதை குறித்து பார்க்கலாம்.
1.காரியங்களை வாய்க்கச் செய்வார் :
“காரியங்களை வாய்க்கச் செய்வார்” என்று சொல்லும்போது நமக்கு நினைவுக்கு வருவது யோசேப்பு தான். ஏனென்றால், கர்த்தர் யோசேப்போடு இருந்தார். எனவே, அவன் காரியசித்தி உள்ளவனாக மாறினான். (ஆதியாகமம் 39:2)
எல்லோரும் போல சாதாரண காரியங்களைச் செய்கின்றவனாக யோசேப்பு இருக்கவில்லை. அவன் எகிப்தில் போத்திபாரின் வீட்டில் அடிமையாக இருந்தான். அவனுடைய எஜமான் அவனுக்குப் பல வேலைகளைக் கொடுத்தான். எந்த வேலை செய்தாலும், அதில் காரியசித்தி உள்ளவனாக இருந்தான். நமக்கு நன்றாகத் தெரிந்த வேலையில் காரியசித்தி உள்ளவர்களாக இருப்பது சாதாரண காரியம். ஆனால், தெரிந்த வேலையோ தெரியாத வேலையோ என்று எதைக் கொடுத்தாலும் அதில் காரியத்தை வாய்க்கச் செய்வது அசாதாரணமான காரியம். இது பரலோக தேவன் கூட இருந்தால் மட்டுமே முடியும்.
இனி வரும் நாட்களில் பரலோக தேவன் உங்களோடு இருந்து, அசாதாரணமான காரியங்களை வாய்க்கச் செய்யப் போகின்றார். முடியாது என்று நினைத்த காரியங்களில், உலகத்தின் மனிதர்களால் முடியாது என்று நினைத்த காரியங்களில், பரலோக தேவன் அற்புதங்களைச் செய்யப் போகின்றார். “தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை.” (லூக்கா 1:37)
2.வேலையில் உயர்வைப் பெற்றுக்கொள்வீர்கள்
யோசேப்பு போத்திபாரின் வீட்டில் அடிமையாக இருந்து, கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தப்பட்டான். அடிமையாக இருந்தவன் வேலைக்காரனாகவும், வீட்டை விசாரிக்கிறவனாகவும், வீட்டில் எல்லாவற்றிற்கும் பொறுப்பானவனாகவும், வீட்டின் அதிபதியாகவும் உயர்த்தப்பட்டான். எப்படி இந்த உயர்வு கிடைத்தது?
கர்த்தர் அவனோடு இருந்தார் என்பதையும், அவன் செய்கின்ற யாவையும் கர்த்தர் வாய்க்கப்பண்ணுகிறார் என்பதையும் அவனுடைய எஜமான் கண்டான். அதனால் அவன் உயர்த்தப்பட்டான்.
கர்த்தர் உங்களோடு இருக்கும்போது, கண்டிப்பாக வேலையில் உயர்வு வரும். இந்த மாதத்தில் உயர்வைப் பெற்றுக்கொள்வீர்கள்.
ஆனால், ஒன்றை நீங்கள் செய்ய வேண்டும். அந்த உயர்வு தானாகக் கிடைக்காது; சீக்கிரத்தில் கிடைக்க வேண்டும் என்றால், கர்த்தர் உங்களோடு இருப்பதையும், நீங்கள் செய்கின்ற காரியங்கள் வாய்க்கின்றதையும் உங்கள் எஜமான் காண வேண்டும் என்று ஜெபிக்க வேண்டும்.
ஜெபத்தைக் கேட்கின்ற தேவன் உங்கள் எஜமான்களின் கண்களைத் திறப்பார். சர்வவல்லவர் உங்களோடு இருப்பதைக் காணும்போது, கண்டிப்பாக உயர்வு கிடைக்கும்.
3.சத்துருக்கள் சமாதானத்திற்காக தேடி வருவார்கள்
கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்த ஈசாக்கு கேராரில் குடியிருந்து, அங்கு விதை விதைத்தான். கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததால், நூறுமடங்கு பலன் அடைந்தான். வரவர விருத்தியடைந்து மகா பெரியவனானான்.(ஆதியாகமம் 26:12,13)
இதனால் பெலிஸ்தியர்கள் பொறாமைக்கொண்டார்கள். அவன் வெட்டின துரவுகளையெல்லாம் மண்ணினால் நிரப்பினார்கள். எப்போதும் ஈசாக்கிற்கு விரோதமாகவே இருந்தார்கள். எவ்வளவு ஒடுக்க முடியுமோ, அவ்வளவு ஒடுக்கினார்கள்.
நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிபோகிறதில்லை (2 கொரிந்தியர் 4:8) என்ற வார்த்தையின் படி எவ்வளவு ஒடுக்கினார்களோ, அவன் ஒடுங்கிப் போகவில்லை; தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருந்தான்.
சாதாரணமான மனிதனால் இது முடியாது. யாரோடு கர்த்தர் இருக்கின்றாரோ, அவர்களால் தான் இது முடியும்.
ஈசாக்க்கோடு கர்த்தர் இருப்பதை கண்ட பெலிஸ்தியர்கள் “நிச்சயமாக கர்த்தர் உம்மோடு இருக்கின்றார் என்று கண்டோம்” என்று சொல்லி, சமாதான உடன்படிக்கை செய்துகொண்டார்கள். (ஆதியாகமம் 26:28)
“தீயோர் நல்லோருக்கு முன்பாகவும், துன்மார்க்கர் நீதிமானின் வாசலிலும் பணிந்துகொள்வார்கள்.” (நீதிமொழிகள் 14:19) என்று வேதம் கூறுகின்றது. அதேபோல் கர்த்தர் நம்மோடு இருந்தால், எதிரிகள் நம் வீட்டு வாசற்படியில் வந்து நமக்காக காத்திருப்பார்கள்.
குறிப்பு : கடந்த வருடங்களைப்போல இந்த 2026-ம் வருடமும் வேதாகமம் எழுதும் தேர்வு நடத்தப்படுகின்றது. இதில் கொடுக்கப்பட்டுள்ள வேதப்பகுதியை விதிமுறைக்குட்பட்டு பிழையில்லாமல், எந்த ஒரு வசனத்தையும் விடாமல் தெளிவாக எழுதிய முதல் மூன்று பேருக்கு பரிசுகள் வழங்கப்படும். முதல் பரிசு :30,000 ரூபாய், இரண்டாம் பரிசு : 20,000 ரூபாய், மூன்றாம் பரிசு :10,000 ரூபாய் ஆகும். இன்னும் பல பரிசுகளும் உள்ளன. ஆறுதல் பரிசும் உண்டு. மேலும் கலந்துக்கொள்ளும் அனைவருக்கும் E-Certificate வழங்கப்படும். விதிமுறைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த தேர்வு சம்பந்தமான Update –களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள 8608833150 என்ற Whats App எண்ணை உங்கள் மொபைல் போனில் பதிந்து வைத்துக்கொள்ளவும்.
தீர்க்கதரிசன செய்திகள் மற்றும் வேதாகமம் எழுதும் தேர்வு சம்பந்தமான Update- கள் இதுவரை Broadcast Method-மூலமாக ஒவ்வொருவருக்கும் தனி தனியாக Whats App எண்ணுக்கு அனுப்பப்பட்டது. இனி இந்த முறையில் அனுப்புவதற்கு ஒரு செய்திக்கு 78 பைசா கட்டனம் செலுத்த வேண்டும் என்று Whats App நிறுவனம் அறிவித்துள்ளது. எனவே, புதிய வருடத்தில் ஒவ்வொருவருக்கும் தனி தனியாக அனுப்பப்படமாட்டாது. மாறாக புதிதாக ஆரம்பிக்கப்பட்ட Prophetic Words என்ற Whats App Channel – ல் அனுப்பப்படும். அதேபோல் You tube Channel மற்றும் Telegram Channel லும் அனுப்பப்படும். கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து உங்கள் விருப்பப்படி கீழ்கண்ட சேனலை Subscribe செய்து கொள்ளுங்கள்.
மேலும் Prophetic Words Whats App AI Chatbot ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாகவும் மிக விரைவாக தீர்க்கதரிசன செய்திகள் மற்றும் வேதாகமம் எழுதும் தேர்வு சம்பந்தமான Update- களை பெற்றுக்கொள்ளலாம். 2026 ம் வருட தேர்வுகளை பற்றி அறிந்துக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள் https://www.pwmi.in/p/bible-writing-exam-2026.html
PW Whats App AI Chatbot : https://api.whatsapp.com/send?phone=918124804845&text=Hi
Whats App Channel : https://whatsapp.com/channel/0029Va5QjlcCxoAuzjZu7c3c
You tube Channel : https://www.youtube.com/channel/UCIzTPvb01G5b-RVZvsftEJw
Telegram Channel : https://t.me/pwmin
