
கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே…
தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு எங்கள் அன்பான வாழ்த்துக்கள்!
பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலின்படி, தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் மெகா வேதாகமம் எழுதும் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
இந்தத் தேர்வின் முக்கிய நோக்கம், தேவனுடைய பிள்ளைகள் பரிசுத்த வேதவசனத்தை வாசித்து, எழுதி, தியானித்து, தேவனுடைய வார்த்தையைத் தங்கள் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதாகும்.
இதற்காக, எந்தவொரு வினாத்தாளும் வழங்கப்படுவதில்லை. கொடுக்கப்பட்டுள்ள வேதப்பகுதியை பார்த்து, தங்களுடைய சொந்தக் கையெழுத்தில், வீட்டிலிருந்தபடியே முழுமையாக எழுத வேண்டும்.
அதன்படி 2025-ம் வருடமும் நடத்தப்பட்டது. இதில் பழைய ஏற்பாட்டில் உள்ள தீர்க்கதரிசன புஸ்தகங்களான எசேக்கியல் முதல் மல்கியா வரை வீட்டிலிருந்தபடியே பார்த்து எழுதவேண்டும் என்றும், விதிமுறைக்குட்பட்டு பிழையில்லாமல், எந்த வசனத்தையும் விடாமல் தெளிவாக எழுதிய முதல் மூன்று பேருக்கு முதல் பரிசாக நான்கு கிராம் தங்கமும்(4 grams). இரண்டாம் பரிசாக மூன்று கிராம் தங்கமும் (3 grams). மூன்றாம் பரிசாக இரண்டு கிராம் தங்கமும் (2 grams), அதேபோல் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைக்கு உட்பட்டு, முழுமையாக அதிக முறை எழுதும் நபருக்கு சிறப்பு பரிசாக 3000 ரூபாயும், கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைக்கு உட்பட்டு எந்த தாலுகாலிருந்து (Taluk) அதிகமானோர் முழுமையாக (Complete) எழுதி அனுப்புகின்றார்களோ அந்த தாலுகாவில் இருந்து அனுப்பியவர்களுக்கு மாத்திரமே ஆறுதல் பரிசு வழங்கப்படும் என்றும் 2025- ம் ஆண்டு ஜனவரி மூன்றாம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.
சுமார் பன்னிரண்டாயிரத்திற்கும் (12,000) மேற்பட்டோர் பதிவு செய்து இந்த தேர்வில் கலந்துக் கொண்டு உற்சாகமாக எழுதினார்கள். கடைசி நாள் 2025 ம் ஆண்டு டிசம்பர் 31 ம் தேதி ஆகும். அதன்படி கடைசி தேதியான 31-12-2025 – க்குள் எழுதிய நோட்டை 30 பேர் நேரிலும், 95 பேர் போஸ்ட் மூலமாகவும், 445 பேர் கொரியர் மூலமாகவும், மொத்தம் 570 பேர் அனுப்பியுள்ளார்கள். அதில் 500 பேர் தமிழிலும், 70 பேர் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார்கள்.
வந்து சேர்ந்த நோட்டுகள் அனைத்தையும் ஆட்களை நியமனம் செய்து, கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைக்குட்பட்டு எல்லாம் சரியாக எழுதியிருக்கின்றார்களா? என்று இரண்டு சுற்றுக்களாக சரிபார்க்கப்பட்டு, இந்த இரண்டு சுற்றிலும் வெற்றிப் பெற்றவர்கள் பம்பர் பரிசுக்கு தகுதியுள்ளவர்கள் ஆவார்கள் என்றும், ஒருவேளை இதில் அதிகமானோர் இருப்பின் சீட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கப்படும் முதல் மூன்று பேருக்கு பரிசுகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
முதல் சுற்றில் அனைவரின் நோட்டுகளும் எங்களால் சரிப்பார்க்கப்பட்டது. 63 பேர் இரண்டாம் சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். முதல்சுற்றில் வெற்றிப்பெற்ற 63 பேரின் நோட்டுகளும் இரண்டாம் சுற்றில் மிக ஆழமாக சரிபார்க்கப்பட்டது. அதில் அதே 37 பேர் இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இறுதி சுற்றில் ஒன்றுக்கும் அதிகமானோர் இருப்பதினால் சீட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கப்படும் முதல் மூன்று நபருக்கு பரிசுகள் வழங்கப்படும் என்று கடந்த நாட்களில் தெரியப்படுத்தியிருந்தோம்.
அதன்படி 19-09-2026 அன்று மாலை 7 மணி அளவில் பரிசுகளை பெறுபவர்கள் யார் யார் என்பதைக் கண்டறிய சீட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கப்படும் இறுதி சுற்றுக்கான கூட்டத்தினை ஆயத்தப்படுத்திருந்தோம். இக்கூட்டத்தில் ஆலங்குளம் பகுதியை மையமாக வைத்து நண்பர்கள் தரிசன ஜெபக்குழு என்ற ஊழியத்தை செய்து வரும் சகோதரர் S.பொன்ராஜ் அவர்கள் முன்னிலையில் 44 பேரின் பெயர்களும் எழுதிய சீட்டுப் போடப்பட்டது. நன்றாக ஊக்கமாக ஜெபித்து முதல் மூன்று நபரை தேர்ந்தெடுத்தார்கள். மேலும் சிறப்பு பரிசுகளை பெறுபவர்களையும் தேர்ந்தெடுத்தார்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு சீக்கிரத்தில் பரிசுகள் வழங்கப்படும். தேர்தெடுக்கப்பட்டவர்கள் யார் என்ற விபரமும், மற்ற பரிசுகளை பெறுபவர்களின் விபரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசுகள் சீக்கிரத்தில் வழங்கப்படும். இர் தேர்வினை எழுதிய அனைவருக்கும் E-Certificate Whats App மூலமாக அனுப்பப்படும்.
மெகா வேதாகமம் எழுதும் தேர்வு 2025 – க்கான வெற்றி பெற்ற நபரை தேர்ந்தெடுப்பதில் முன்னிலை வகித்து, சீட்டு போட்டு குலுக்கல் முறையில் ஒரு நபரை தேர்ந்தெடுத்த சகோதரர் S.பொன்ராஜ் அவர்களுக்கும், வேதாகம் எழுதும் தேர்வு-2025 யை பரலோக திட்டத்தின்படி நடத்தி முடிப்பதற்காக ஜெபித்து, கொடுத்து, உழைத்து பிரயாசப்பட்ட அனைவருக்கும் தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் சார்பாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம். வெற்றிப்பெற்ற அனைவருக்கும் எங்கள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றோம். தேர்வில் கலந்துக் கொண்டு பரிசுத்த வேதத்தினை சொந்த கரங்களால் எழுதிய உங்கள் அனைவரையும் பரலோக தேவன் தாமே ஆசீர்வதித்து உயர்த்துவாராக. ஆமென்.
குலுக்கல் முறையில் சீட்டு போட்டு தேர்வு செய்யப்பட்டவரின் விபரம்:
முதல் பரிசு :
Mrs. R.Peratchi selvi,( Qz11832, RvF126) Tirunelveli (TI)
இரண்டாம் பரிசு :
Mrs.J. Felcy (Qz11406B, RvF410) Tirunelveli (TI)
மூன்றாம் பரிசு :
Mr. G.Christopher (Qz1988, RvF397), Tenkasi (TS)
மற்ற பரிசுகள் பெறுபவர்களின் விபரங்கள் :
- இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்படும் அனைவருக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மொத்தம் 37 பேர் இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அவர்களில் மூன்று பேருக்கு பரிசுகள் கிடைத்துள்ளது. எனவே, மற்ற 34 பேருக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்படும்.
2.கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைக்கு உட்பட்டு, முழுமையாக அதிக முறை எழுதும் நபருக்கு சிறப்பு பரிசாக 3000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மொத்தம் மூன்று பேர் ஐந்து முறை InComplete இல்லாமல் முழுமையாக எழுதி அனுப்பியிருந்தார்கள்.(Qz1161, Qz10234, Qz2647) ஒன்றுக்கு மேற்பட்டோர் சமமாக எழுதியிருந்தால் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு நபருக்கு பரிசு வழங்கப்படும் என்பது விதிமுறை. எனவே சீட்டு போட்டு குலுக்கல் முறையில் திருப்பூர் மாவட்டத்தினை சேர்ந்த Mrs. J.Esther Roselin அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். ஐந்து முறை அனுப்பிய அவர்களுடைய நோட் எண் F004, F261 ,F262, F263, F280 ஆகும். அவருக்கு சீக்கிரத்தில் பரிசுதொகை வழங்கப்படும்.
- கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைக்கு உட்பட்டு எந்த தாலுகாலிருந்து (Taluk) அதிகமானோர் முழுமையாக (Complete) எழுதி அனுப்புகின்றார்களோ அந்த தாலுகாவில் இருந்து அனுப்பியவர்களுக்கு மாத்திரமே ஆறுதல் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை தாலுகாவிலிருந்து 26 பேர் அனுப்பியுள்ளார்கள். எனவே, அந்த தாலுகாவிலிருந்து அனுப்பிய அனைவருக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்படும்.
பரிசு பெறுகின்றவர்களின் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது :
2027 ம் வருடம் நடத்தப்படும் தேர்வினைப்பற்றி அறிய இந்த லிங்கை கிளிக் செய்யவும். CLICK HERE
உங்கள் முடிவுகளை தெரிந்துக்கொள்ள வேண்டுமா?
(உங்கள் மொபைல் எண்ணை கீழே கொடுக்கப்பட்டுள்ள Box-ல் Type செய்யுங்கள். (குறிப்பு : மொபைல் எண்ணுடன் 91 சேர்த்து Type செய்யவும். + வேண்டாம். Example 918608833150) பின்பு Password Type செய்யவும். உங்களுக்கான Password உங்கள் Rv எண் ஆகும். (Example Mobile No — 918608833150, Password F001 மேலும் இது உங்கள் Browser-ல் Open ஆகவில்லையென்றால் Incognito tab – ல் Open செய்யவும்)
2025 ம் வருடத்திற்கான உங்கள் முடிவுகளை அறிந்துக்கொள்ள வேண்டுமா? இந்த லிங்கை கிளிக் செய்யவும். Click Here
மெகா வேதாகமம் எழுதும் தேர்வு-26
தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்…! இந்த 2026 ம் வருடம் தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் சார்பாக நடத்தப்படுகின்ற மெகா வேதாகமம் எழுதும் தேர்வினை பற்றிய விதிமுறைகளை அறிந்துக்கொள்ளவும், பதிவு செய்யவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
https://www.pwmi.in/p/bible-writing-exam-2026.html ,
https://pwmii.in/bible-writing-exam-2026/
2027 ம் வருடம் நடத்தப்படும் தேர்வினைப்பற்றி அறிய இந்த லிங்கை கிளிக் செய்யவும். CLICK HERE
PW Whats App AI Chatbot : Click Here
Whats App Channel : Click Here
You tube Channel : Click Here
Telegram Channel : Click Here
மேலும் Prophetic Words Whats App AI Chatbot ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாகவும்
மிக விரைவாக தீர்க்கதரிசன செய்திகள் மற்றும் வேதாகமம் எழுதும் தேர்வு சம்பந்தமான
Update- களை பெற்றுக்கொள்ளலாம்.
2026 ம் வருட தேர்வுகளை பற்றி அறிந்துக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள் Click Here
PW Whats App AI Chatbot : https://api.whatsapp.com/send?phone=918124804845&text=Hi
Whats App Channel : https://whatsapp.com/channel/0029Va5QjlcCxoAuzjZu7c3c
You tube Channel : https://www.youtube.com/channel/UCIzTPvb01G5b-RVZvsftEJw
Telegram Channel : https://t.me/pwmin