
கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே…
திரியேக தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்! உங்களுக்கு என்னுடைய உள்ளத்தின் ஆழத்திலிருந்து அன்பின் வாழ்த்துகள். நீங்கள் சுகமாக இருப்பீர்கள் என்று விசுவாசிக்கின்றேன். பரலோக தேவன்தாமே உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
கர்த்தருடைய மகா பெரிய கிருபையினால், எட்டாவது வருடத்திலும் நடத்தப்படும் மெகா வேதாகமம் எழுதும் தேர்வுக்கான அறிவிப்பினை உங்களுக்கு தெரியப்படுத்துவதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன்.
வார்த்தையாக வந்த சர்வவல்ல தேவனுடைய வார்த்தையை தேவனுடைய பிள்ளைகள் வாசித்து, எழுதி, தியானிக்க வேண்டும்; மேலும், அதைத் தங்கள் பழக்கமாக்கிக்கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், 2019-ஆம் வருடத்திலிருந்து ஒவ்வொரு வருடமும் தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் சார்பாக வேதாகமம் எழுதும் தேர்வு நடத்தப்படுகின்றது. இதுவரை ஏழு வருடங்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.
வினாத்தாள்களைக் கொடுத்து, விடைகளை எழுதச் சொல்லும்போது, அநேகர் கூகுள் மூலமாக விடைகளைத் தேடி எழுதுகின்றார்கள். இந்தத் தேர்வு அப்படியில்லாமல், தேவனுடைய பரிசுத்த வேதத்தைச் சொந்தக் கையால் எழுதச் சொல்லுவதால், அநேகருக்கு ஆசீர்வாதமாகவும், ஆவிக்குரிய வாழ்க்கைக்கு மிகவும் பிரயோஜனமாகவும் உள்ளது. ஆவியின் பட்டயமாகிய வேத வசனங்கள் ஆவிக்குரிய மனிதனுக்குள் செல்வதால், அநேகருடைய வாழ்க்கையில் உள்ள சாபக்கட்டுகள் முறிக்கப்பட்டுள்ளன.
கடந்த வருடங்களில் அநேகர் இந்தத் தேர்வுகளில் கலந்துகொண்டு, தேவனுடைய பரிசுத்த வேதத்தைச் சொந்தக் கையால் எழுதி, பரலோக தேவனுடைய ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டார்கள். சத்திய வேதத்தையும் அறிந்துகொண்டார்கள். ஊழியத்தின் மூலமாக வழங்கப்படும் பரிசுகளையும் பெற்றுக்கொண்டார்கள்.
எனவே, கடந்த வருடங்களைப்போல, இந்த 2027-ஆம் வருடமும் எட்டாவது ஆண்டாக வேதாகமம் எழுதும் தேர்வு நடத்தப்படுகின்றது. இதில் கொடுக்கப்பட்டுள்ள வேதப்பகுதியை விதிமுறைகளுக்கு உட்பட்டு, பிழையில்லாமல், எந்த ஒரு வசனத்தையும் விடாமல், தெளிவாக எழுதிய முதல் மூன்று பேருக்கு பரிசுகள் வழங்கப்படும். முதல் பரிசு: ₹50,000, இரண்டாம் பரிசு: ₹30,000, மூன்றாம் பரிசு: ₹20,000 ஆகும். இன்னும் பல பரிசுகளும் உள்ளன. ஆறுதல் பரிசும் உண்டு. மேலும், கலந்துகொள்ளும் அனைவருக்கும் E-Certificate வழங்கப்படும்.
உங்கள் வீட்டிலிருந்தபடியே, பெரியவர்கள், சிறியவர்கள் என்ற வயது வரம்பின்றி, யார் வேண்டுமென்றாலும், எத்தனை முறை வேண்டுமென்றாலும், ஒரே குடும்பத்தில் உள்ள எத்தனை நபர்கள் வேண்டுமென்றாலும் கலந்துகொண்டு எழுதலாம்.
நாங்கள் நடத்தும் எந்தத் தேர்வுக்கும் எந்தவிதமான கட்டணங்களும் வாங்குவதில்லை. அனுமதி முற்றிலும் இலவசம். அதேபோல், இந்தத் தேர்வுக்கும் எந்தக் கட்டணமும் கிடையாது. கொடுக்கப்பட்டுள்ள வேதப்பகுதியைப் பார்த்து, Long Size Note-ல் பிழையில்லாமல், சொந்தக் கையால் தெளிவாக எழுத வேண்டும். எழுதிய நோட்டை கடைசி தேதிக்குள் எங்களுக்கு கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். நீங்களும் இத்தேர்வில் கலந்துகொண்டு, வேதவசனத்தைச் சொந்தக் கையால் எழுதுங்கள்.
இந்த 2027-ஆம் வருடம் விதிமுறைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எனவே, கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை மிகக் கவனமாக வாசித்த பின்பு எழுதவும். ஏனென்றால், விதிமுறைகளுக்கு உட்பட்டு, பிழையில்லாமல், எந்த வசனத்தையும் விடாமல், தெளிவாக எழுதியவர்களுக்கு மட்டுமே பரிசுகள் வழங்கப்படும்.
தேர்வினை எழுதுவதினால் கிடைக்கும் ஆசீர்வாதங்கள் மற்றும் தேர்வுக்கான விதிமுறைகள், பரிசுகளுக்கான முழு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அதை கவனமாக வாசித்த பின்பு தேர்வினை எழுத தொடங்குங்கள்.
தேர்வுக்கான விதிமுறைகள், பரிசுகளுக்கான முழு விபரங்களை கவனமாக வாசித்த பின்பு தேர்வினை எழுத தொடங்குங்கள். மேலும் வேதாகமம் எழுதும் தேர்வு-2027 சம்பந்தமான Update –களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள 8608833150 என்ற Whats App எண்ணை உங்கள் மொபைல் போனில் பதிந்து வைத்துக்கொள்ளவும். முன்பு தேர்வு சம்பந்தமான எந்த தகவலும் தனித்தனியாக உங்கள் Whats App எண்ணிற்கு அனுப்பப்பட்டது. இப்பொழுது அப்படி அனுப்புவதற்கு Whats App தடைசெய்துள்ளது. எனவே எல்லா Update –களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எங்களது Whats App , Youtube, மற்றும் Telegram, சேனல்களை (Channel) கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து Subscribe செய்யுங்கள். Subscribe செய்த பின்பு அதற்கான ஒரு Screenshot மட்டும் எடுத்து, +918608833150 WhatsApp Number-க்கு அனுப்பி வையுங்கள்.
Whats App Channel : CLICK HERE
You Tube : CLICK HERE
Telegram : CLICK HERE
தேர்வு விவரங்கள்
தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடும் நாள்: 01-01-2027
எழுதிய நோட் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 31-12-2027
மொத்த நாட்கள்: 365
வேதப்பகுதி:
மொத்த வசனங்கள்:
மொத்த அதிகாரங்கள்:
மொத்த புத்தகங்கள்:
ஒரு நாளைக்கு எழுத வேண்டிய வசனங்கள்:
தேர்வினை எழுதுவதினால் கிடைக்கும் ஆசீர்வாதங்கள்:
- ஒருமுறை எழுதுவது பத்து முறை வாசிப்பதற்குச் சமம் என்று சொல்லுவார்கள். அதன்படி, வசனத்தை எழுத எழுத பத்து முறை வாசிப்பதற்குச் சமமாகும். இதனால், வசனமாகிய விதை இருதயத்தில் ஆழமாகப் பதிந்து, வளர்ந்து ஆவிக்குரிய கனிகளைக் கொடுக்கும்.
- எழுதுவதால் வசனங்கள் உள்ளார்ந்த மனிதனுக்குள் ஆழமாகச் செல்கின்றன. இதனால், பல தலைமுறைகளாகத் தொடர்ந்து வரும் பாவச் சாபக் கட்டுகள் உடைக்கப்படுகின்றன.
- பரிசுத்த வேதவசனங்கள் இருதயத்தின் ஆழத்தில் இருப்பதால், கடைசிக்கால வஞ்சகங்களுக்குத் தப்பித்துக்கொள்ளலாம்.
- சிறுவயதில் மற்றவர்கள் பேசிய வார்த்தைகளினிமித்தம் வந்த காயங்கள், தவறாக நடத்தப்பட்டதினிமித்தம் வந்த மனக்காயங்கள் மற்றும் சிறுவயதில் செய்த பாவங்கள் இருதயத்தில் ஆறாத வடுவாக இருக்கும். பரிசுத்த வேதவசனத்தை எழுத எழுத, இந்தக் காயங்கள் சரியாகும்; ஆறாத வடுக்கள் அழிக்கப்படும். ஏனென்றால், தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது. (எபிரெயர் 4:12)
- பொருத்தனையோடு இந்தத் தேர்வினை எழுதும்போது, நீண்ட நெடிய நாட்களாக இருக்கும் ஆசீர்வாதத் தடைகள் மாறி, அற்புதங்கள் நடக்கும்.
(கவனிக்க: கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்ட தேர்வுகளில் அநேகர் கலந்துகொண்டு, கர்ப்பத்தின் கனிக்கான ஆசீர்வாதங்கள், திருமணத்திற்கான ஆசீர்வாதங்கள், சரீர சுகத்திற்கான ஆசீர்வாதங்கள் மற்றும் சொந்த வீட்டிற்கான ஆசீர்வாதங்களைப் பெற்று சுதந்தரித்துள்ளார்கள்.)
- தேர்வில் கலந்துகொள்ளும் ஒவ்வொருவரின் குடும்பத்திற்காகவும் எங்களது ஜெபவீரர்கள் ஊக்கமாகவும் கருத்தாகவும் தினமும் ஜெபிப்பார்கள். உங்களுக்கு தேவையென்றால், ஆவிக்குரிய வாழ்க்கைக்குத் தேவையான தீர்க்கதரிசன ஆலோசனைகள் வழங்கப்படும்.
- தேர்வுக்குப் பதிவு செய்யும் ஒவ்வொருவருக்கும், ஊழியத்தின் மூலமாக, பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலின்படி தீர்க்கதரிசன செய்திகள் அனுப்பப்படும்.
தேர்வு எழுதுவதற்கான விதிகள் மற்றும் விதிமுறைகள்:
தேர்வுக்கான எந்த விதிமுறைகளும், மிக முக்கியமான விதிகளும் எங்கள் பக்கத்திலிருந்து போன் கால் மூலமாகச் சொல்லப்படமாட்டாது. நீங்கள் படித்துப் பார்த்துத்தான் அறிந்துகொள்ள வேண்டும். எனவே, கவனமாகப் படித்து அறிந்துகொள்ளுங்கள்.
மிக முக்கியமான விதிகள்:
1.இந்தத் தேர்வினை கண்டிப்பாக Long Size Note-ல்தான் எழுத வேண்டும். உங்கள் விருப்பப்படி Ruled அல்லது Unruled நோட்டில் எழுதலாம். Paper-ல் எழுதியிருந்தால் Reject செய்யப்படும். Paper-ல் எழுதி, Long Size Note போல் Binding அல்லது Spiral Binding செய்து அனுப்பலாம். அது ஏற்றுக்கொள்ளப்படும்.
2.நீலம் மற்றும் கருப்பு நிறம் என்ற வித்தியாசம் இல்லாமல், எந்த நிறப் பேனாவைக் கொண்டும் எழுதலாம். நிறங்களை மாற்றி மாற்றியும் எழுதலாம் அல்லது ஒரே நிறத்தில் எழுதலாம். அது உங்கள் விருப்பத்திற்குட்பட்டது. ஆனால், தலைப்பை கருப்பு நிறப் பேனாவைக் கொண்டே எழுத வேண்டும். உதாரணமாக, “அதிகாரம் ஒன்று” என்பதையும் கருப்பு நிறத்தில் எழுத வேண்டும். அதேபோல், எல்லாப் பக்கங்களிலும் எந்தப் புத்தகம் என்பதையும், எந்த அதிகாரம் என்பதையும் குறிப்பிட வேண்டும். இவ்வாறு எழுதப்படாமல் இருக்கும் நோட் Reject செய்யப்படும்.
3.உங்கள் விருப்பத்தின்படி எந்தப் பேனாவை (Ball Point, Ink Pen அல்லது Gel Pen) பயன்படுத்தியும் எழுதலாம். பென்சிலைக் (Pencil) கொண்டு எழுதக்கூடாது. எழுதியிருந்தால், உங்கள் நோட் எங்களால் கண்டிப்பாக Reject செய்யப்படும்.
4.தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுதலாம். ஆங்கிலத்தில் எழுதினால், எந்த Version என்பதைக் குறிப்பிட வேண்டும். (Ex: NIV, NKJV, KJV & etc.) எந்த Version என்பதைக் குறிப்பிடாமல் இருந்தால், உங்கள் நோட் எங்களால் கண்டிப்பாக Reject செய்யப்படும்.
5.அடித்தல், திருத்தல் இல்லாமல், தெளிவாகவும் பிழையின்றியும் எழுதியிருக்க வேண்டும். அடித்தல், திருத்தல் இருந்தால், கண்டிப்பாக மதிப்பீடு செய்யும்போது Reject செய்யப்படும். ஏதாவது பிழை ஏற்பட்டால், அதை Correction Pen (Whitener) பயன்படுத்தி அழித்துவிட்டு, சரியாக மறுபடியும் எழுதலாம் அல்லது அந்தப் பக்கத்தைக் கிழித்துவிட்டு அடுத்த பக்கத்தில் எழுதலாம்.
6.எந்த வசனத்தையும், எந்த அதிகாரத்தையும், எந்தப் புத்தகத்தையும் விடாமல், கண்டிப்பாக எல்லா வசனங்களையும் எழுத வேண்டும். எந்த ஒரு வசனத்தையாவது அல்லது அதிகாரத்தையாவது எழுதாமல் விட்டிருந்தாலும், கண்டிப்பாக Reject செய்யப்படும்.
7.நிறுத்தக்குறிகளான (Punctuation) முற்றுப்புள்ளி (Full Stop), முக்காற்புள்ளி (Colon), அரைப்புள்ளி (Semicolon), காற்புள்ளி (Comma), உணர்ச்சிக்குறி (Exclamation Point), வினாக்குறி (Question Mark), ஒற்றை மேற்கோள்குறி (Apostrophe) போன்றவை பரிசுத்த வேதாகமத்தில் உள்ளது போல் சரியாக இட வேண்டும். Random-ஆக Check பண்ணும்போது இதில் தவறு கண்டுபிடிக்கப்பட்டால், Reject செய்யப்படும்.
8.துவக்கம் முதல் இறுதி வரை ஒரே Handwriting-ல் இருக்க வேண்டும். உங்கள் நோட்டில் வேறு நபர்கள் எழுதியிருக்கக்கூடாது. Handwriting-ல் வித்தியாசம் இருந்தால், கண்டிப்பாக Reject செய்யப்படும்.
9.நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உங்கள் கஷ்டங்களைச் சொல்லி, “எங்களுக்கு பரிசுகளைத் தாருங்கள்” என்ற எந்த ஒரு கோரிக்கையும் வைக்க வேண்டாம். இவ்வாறு கோரிக்கை வைப்பவர்களின் நோட் Reject செய்யப்படும்.
10.கடைசி நாள்: 2027 டிசம்பர் 31. இந்தத் தேதிக்குள் எழுதிய Long Size Note எங்களுக்குக் கிடைக்குமாறு Courier அல்லது Post மூலமாக அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
Prophetic Words Trust,
5-13, Thip-Meenachipuram,
Thippanampatti-PO,
Tenkasi – 627 808.
கடைசித் தேதிக்குப் பின்பு வரும் நோட் எங்களால் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. அது Reject செய்யப்படும். நேரில் கொண்டுவந்து தர வேண்டும் என்று விரும்பினால், 2027 டிசம்பர் 20-ஆம் தேதிக்குப் பின்பு கொண்டுவரவும். அதற்கு முன்பாக நேரில் கொண்டு வரும் நோட்டுகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
மிக முக்கியமான விதிமுறைகள்:
தேர்வுக்கு பதிவு செய்யும் முறை:
1.பதிவு செய்த பின்புதான் தேர்வு எழுத வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. விதிமுறைகள் தெரிந்தால் போதும்; தேர்வினை எழுத ஆரம்பிக்கலாம். எழுதி முடித்த பின்பு நோட்டினை அனுப்பும்போது கூட பதிவு செய்யலாம்.
2.கடந்த வருடங்களில் நடத்தப்பட்ட தேர்வுகளுக்குப் பதிவு செய்து கலந்துகொண்டவர்கள், அதே பதிவு எண்ணை வைத்து இந்த வருடமும் எழுதலாம். பதிவு எண் இல்லாதவர்கள் புதிதாகப் பதிவு செய்ய வேண்டும்.
3.கடந்த வருடம் பதிவு செய்து, பதிவு எண் தெரியாமல் இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கைக் கிளிக் செய்து அறிந்துகொள்ளவும்.
4.ஒரே முகவரியில் வசிக்கும் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒரு பதிவு எண்ணை வைத்துக்கொண்டு எழுதலாம். ஆனால், ஒவ்வொருவரும் தனித்தனியாக, தனி நோட்டில், துவக்கம் முதல் இறுதி வரைக்கும் எழுத வேண்டும்.
5.வெவ்வேறு முகவரிகளில் வசிக்கும் குடும்ப உறுப்பினர்கள் தனித்தனியாகப் பதிவு செய்ய வேண்டும்.
6.தேர்வுக்குப் பதிவு செய்ய, கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை (Link) கிளிக் (Click) செய்து, கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை நிரப்பி அனுப்பவும். விண்ணப்பப் படிவத்தை நிரப்பி Submit கொடுத்தவுடனே ஒரு தற்காலிக எண் கொடுக்கப்படும். அந்த எண்ணை வைத்து தேர்வினை எழுத ஆரம்பித்துவிடலாம்.
7.லிங்கை (Link) கிளிக் (Click) செய்து பதிவு செய்யத் தெரியாதவர்கள், ஒரு A4 சீட் பேப்பரில் உங்கள் முழுப் பெயர், வாட்ஸ்அப் எண், மொபைல் எண், முகவரி, பிறந்த தேதி மற்றும் “விதிமுறைகள் அனைத்தையும் வாசித்து தெரிந்துகொண்டேன்” என்ற சுய உறுதிமொழி அறிக்கையையும் தெளிவாக எழுதி எங்கள் முகவரிக்கு அனுப்பவும். அல்லது, அந்த A4 சீட் பேப்பரை Photo எடுத்து எங்கள் வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்புங்கள்.
8.நீங்கள் அனுப்பும் விண்ணப்பம் எங்களால் பரிசீலிக்கப்பட்டு, இரண்டு வாரங்களுக்குள் பதிவு எண் கொடுக்கப்படும். உங்கள் பதிவு எண் Qz என ஆரம்பிக்கும். இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் பதிவு எண் கொடுக்கப்படாவிட்டால், எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்.
9.இந்தத் தேர்வுக்காக எந்தவிதமான கட்டணமும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கேட்பதில்லை. எனவே, யாரும் பணத்தைக் கொடுத்து ஏமாற வேண்டாம். யாராவது பணம் கேட்டால், எங்களுக்குத் தகவல் தெரிவியுங்கள்.
தேர்வினை எழுதும் முறை:
1.உங்கள் விருப்பப்படி கோடு போட்ட (Ruled) அல்லது கோடு போடாத (Unruled) நோட்டில் எழுதலாம்.
2.உங்களுக்கு ஏதேனும் ஜெபக் குறிப்புகள் இருந்தாலும் அல்லது ஏதேனும் அற்புதத்திற்காகக் காத்துக்கொண்டிருந்தாலும், அதை உங்கள் நோட்டின் முதல் பக்கத்தில் எழுதி வையுங்கள். இந்தத் தேர்வினை எழுதி முடிப்பதற்குள், கர்த்தருக்குச் சித்தமானால், அந்தக் காரியத்தில் ஒரு மாற்றத்தைக் காண்பீர்கள்.
3.இது வேதாகமம் எழுதும் தேர்வு. கொடுக்கப்பட்டுள்ள வேதப்பகுதியைப் பார்த்து, அப்படியே சொந்தக் கையால் எழுத வேண்டும். நாங்கள் எந்தக் கேள்வித்தாளும் அனுப்பமாட்டோம்.
4.பரிசுத்த வேதாகமத்தில் உள்ளது போல் இரண்டாகப் பிரித்து எழுத வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கு விருப்பம் இருந்தால் அவ்வாறு எழுதலாம்.
5.பரிசுத்த வேதாகமத்தில் உள்ளது போல் லை, னை, னா (etc.) போன்ற எழுத்துக்களை எழுத வேண்டிய அவசியமில்லை. இப்பொழுது உள்ளது போல் எழுதலாம்.
6.உங்களுக்கு விருப்பம் இருந்தால், ஒவ்வொரு அதிகாரமும் முடிந்த பிறகு கோடு போடலாம்.
7.ஒரு நோட்டில் எழுதி முடித்துவிட்டால், தொடர்ந்து மற்றொரு நோட்டில் எழுதத் தொடங்கலாம்.
நோட் அனுப்பும் முறை:
1.நீங்கள் எழுதிய நோட்டை அனுப்பும்போது, ஒரு பேப்பரில் உங்கள் பதிவு எண், பெயர், முழு முகவரி, மொபைல் எண், வாட்ஸ்அப் எண் போன்ற விவரங்களைத் தெளிவாக எழுத வேண்டும். அதோடு, ஒருவர் எத்தனை முறை வேண்டுமென்றாலும் எழுதி அனுப்பலாம் என்பதால், நீங்கள் அனுப்பும் நோட் ஒன்றாவது முறையா (First Set) அல்லது இரண்டாவது முறையா (Second Set) என்பதையும் குறிப்பிட வேண்டும். நீங்கள் எழுதி அனுப்பிய நோட் உங்களுக்குத் திரும்ப அனுப்ப வேண்டும் என்றால், “NOTE RETURN” என்றும், எந்த மொழியில் எழுதியுள்ளீர்கள் என்பதையும், ஆங்கிலம் என்றால் அதன் Version என்ன என்பதையும், மொத்தம் எத்தனை நோட்டுகள் அனுப்பியுள்ளீர்கள் என்பதையும் தெளிவாக எழுதி அனுப்ப வேண்டும்.
2.எந்த மாவட்டத்திலிருந்து அதிகமானோர் எழுதுகின்றார்களோ, அவர்களுக்கு ஆறுதல் பரிசு வழங்கப்படும் என்பதால், முகவரியை எழுதும்போது மறக்காமல் நீங்கள் வசிக்கும் தாலுகா மற்றும் மாவட்டம் எது என்பதைக் குறிப்பிடுங்கள்.
3.நீங்கள் அனுப்பும் நோட் எக்காரணம் கொண்டும் திருப்பி அனுப்பப்படமாட்டாது. அந்த நோட் ஏழை, எளிய மக்களின் உதவிக்காகவும், தகப்பன், தாயை இழந்த பிள்ளைகளின் படிப்புச் செலவுக்காகவும், மருத்துவச் செலவுக்காகவும் அறக்கட்டளை (Trust) மூலமாகப் பயன்படுத்தப்படும். யாருக்குப் பயன்படுத்தினோம் என்ற விவரங்கள் பின்நாட்களில் உங்களுக்கு அனுப்பப்படும்.
4.நீங்கள் அனுப்பும் நோட்டைத் திருப்பி உங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பும் பட்சத்தில், அதற்கான Courier அல்லது Post மூலமாகத் திரும்ப அனுப்புவதற்கான செலவுத்தொகையைச் செலுத்த முடியுமென்றால், நோட்டை அனுப்பும்போது முதல் பக்கத்தில் “NOTE RETURN” என்று எழுதி அனுப்புங்கள். இறுதி முடிவு அறிவிக்கப்பட்ட பின்பு, அதற்கான விவரங்கள் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
(கவனிக்க: நோட்டை அனுப்பும்போது முதல் பக்கத்தில் “NOTE RETURN” என்று எழுதி அனுப்பியவர்களுக்கு மட்டுமே திருப்பி அனுப்பி வைக்கப்படும். எழுதவில்லையென்றால், கண்டிப்பாகத் திருப்பி அனுப்பப்படமாட்டாது. அது ஏழை மக்களுக்கு உதவுவதற்காகப் பயன்படுத்தப்படும்.)
5.நீங்கள் அனுப்பும் நோட் எங்களுக்கு வந்து சேர்ந்தவுடனே Entry போட்டு, உங்கள் நோட் வந்து சேர்ந்ததற்கான Acknowledgement மற்றும் வந்து சேர்ந்ததற்கான எண் (Rv No.) ஆகியவை, நீங்கள் பதிவு (Register) செய்யும்போது கொடுத்த WhatsApp எண் மற்றும் E-Mail-க்கு அனுப்பப்படும்.
________________________________________
நோட் சரிபார்க்கும் முறை:
1.நீங்கள் எழுதிய நோட்டை மிக நேர்மையான முறையில் சரிபார்ப்பதற்காக, எழுதியவர் யார்? எந்த ஊர்? போன்ற எந்த ஒரு தனிப்பட்ட விவரங்களும் சரிபார்ப்பவர்களுக்கு அறிவிக்கப்படமாட்டாது. எனவே, அதில் எழுதப்பட்டுள்ள உங்கள் சொந்த விவரங்கள் முழுவதும் கிழிக்கப்பட்டுவிடும்.
2.நீங்கள் அனுப்பும் நோட் மிக நேர்மையான முறையில் இரண்டு சுற்றுகளாக, தொடக்கம் முதல் இறுதி வரை திருத்தப்படும். முதல் சுற்றில் வெற்றிபெற்றவர்கள் மட்டுமே இரண்டாம் சுற்றுக்கு அனுமதிக்கப்படுவார்கள். இரண்டாம் சுற்றில் வெற்றிபெற்றவர்கள் மட்டுமே இறுதி சுற்றுக்குத் தகுதியானவர்கள் ஆவார்கள்.
3.ஒவ்வொரு சுற்றிலும் ஏதேனும் தவறுகள் இருந்தால், உங்களுக்கு தெரிவிக்கப்படும். மேலும், அதன் Photo Copy-யும் உங்களுக்கு அனுப்பப்பட்டு, உங்கள் வேதாகமத்தில் சரிபார்க்க அனுமதி வழங்கப்படும். நீங்கள் சரிபார்த்து, சரியா அல்லது தவறா என உறுதி செய்த பின்பே அது சரியாகவோ அல்லது தவறாகவோ ஏற்றுக்கொள்ளப்படும்.
4.ஒவ்வொரு வேதாகமப் பதிப்பிற்கும் (Version) இடையில் வசன வேறுபாடுகள் இருக்கக்கூடும். நீங்கள் எழுதியது உங்கள் வேதாகமத்தின்படி சரியாக இருந்தும் தவறாகக் குறிக்கப்பட்டுள்ளதாகக் கருதினால், Appeal செய்யலாம்.
________________________________________
பரிசு விவரங்கள்:
1.கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு சரியாக எழுதிய முதல் மூன்று பேருக்குப் பரிசுகள் வழங்கப்படும். முதல் பரிசு: ₹50,000, இரண்டாம் பரிசு: ₹30,000, மூன்றாம் பரிசு: ₹20,000 ஆகும். அதிகமானோர் விதிமுறைகளுக்கு உட்பட்டு சரியாக எழுதியிருந்தால், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் முதல் மூன்று நபர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும். மேலும், கலந்துகொள்ளும் அனைவருக்கும் E-Certificate வழங்கப்படும்.
2.ஒரு நபர் எத்தனை முறை வேண்டுமென்றாலும் எழுதலாம். கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு, முழுமையாக அதிக முறை எழுதும் நபருக்கு சிறப்புப் பரிசாக ₹3,000 வழங்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்டோர் சமமாக எழுதியிருந்தால், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு நபருக்குப் பரிசு வழங்கப்படும்.
(குறிப்பு: Incomplete இல்லாமல் முழுமையாக எழுதி அனுப்பியவர்கள் மட்டுமே கணக்கில் சேர்க்கப்படுவார்கள்.)
3.இறுதி சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் அனைவருக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்படும்.
4.நீங்களும் இந்தத் தேர்வினை எழுத வேண்டும், மற்றவர்களையும் எழுத வைக்க வேண்டும் என்பதற்காக, எந்த மாவட்டத்திலிருந்து (District) 500-க்கும் அதிகமானோர் முழுமையாக (Complete) எழுதி அனுப்புகின்றார்களோ, அந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே ஆறுதல் பரிசு வழங்கப்படும். இதில் சமநிலை ஏற்பட்டால், சீட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கப்படும் ஒரு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.
(Incomplete இல்லாமல் முழுமையாக எழுதி அனுப்பியவர்கள் மட்டுமே கணக்கில் சேர்க்கப்படுவார்கள். மேலும், ஒன்றுக்கும் அதிகமான முறை (SET) எழுதி அனுப்பியிருந்தாலும், ஒரு நபருக்கு ஒரு SET மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.)
தேர்வின் முடிவுகளையும் Updates-களையும் அறிய:
1.தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் சார்பாக கடந்த வருடங்களில் நடத்தப்பட்ட மெகா வேதாகமம் எழுதும் தேர்வுக்கான முடிவுகள் மூன்று முதல் நான்கு மாதங்கள் கழித்துதான் அறிவிக்கப்பட்டன. எனவே, அனுப்பப்படும் அனைத்து நோட்டுகளையும் திருத்திய பின்புதான் முடிவுகள் அறிவிக்கப்படும்.
2.உங்கள் முடிவுகளைப் பார்க்க பதிவு எண் மற்றும் வந்து சேர்ந்ததற்கான எண் (Rv No.) மிகவும் அவசியமாகும். பதிவு எண் என்பது உங்கள் பெயர், சரியான முகவரி, WhatsApp எண் ஆகியவற்றைக் கொடுத்து தேர்வுக்குப் பதிவு செய்த பின்பு, எங்களால் பரிசீலிக்கப்பட்டு கொடுக்கப்படும். இது Qz என ஆரம்பிக்கும். இந்த எண்ணை வைத்து ஊழியத்தின் மூலமாக நடத்தப்படும் எந்த வேதாகமம் எழுதும் தேர்வுக்கும் பயன்படுத்தலாம். இது மாறாது.
3.ஆனால், வந்து சேர்ந்ததற்கான எண் (Rv No.) என்பது நீங்கள் நோட்டை அனுப்பும்போது உங்களுக்கு வழங்கப்படும். இது வருடத்திற்கு வருடம் மாறுபடும்.
4.தேர்வு சம்பந்தமான எந்த ஒரு தகவலும், முடிவுகளும் நீங்கள் பதிவு செய்யும்போது கொடுத்துள்ள உங்கள் WhatsApp எண், E-Mail மற்றும் முகவரிக்கு அனுப்பப்படும். போன் கால் மூலமாகவும் தெரியப்படுத்தப்படும்.
5.வேதாகமம் எழுதும் தேர்வு–2027 சம்பந்தமான Updates-களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள, 8608833150 என்ற WhatsApp எண்ணை உங்கள் மொபைல் போனில் பதிவு செய்து வைத்துக்கொள்ளவும். ஏதேனும் சந்தேகம் இருந்தால், +91 8608833150, +91 8608096748 என்ற எண்களைத் தொடர்புகொள்ளுங்கள்.
6.மேலும், எங்களது WhatsApp, YouTube மற்றும் Telegram சேனல்களை (Channel) கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கைக் கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்.
Whats App Channel : CLICK HERE
You Tube : CLICK HERE
Telegram : CLICK HERE
7.இப்பொழுது தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக Prophetic words என்ற Android Mobile App வெளியிடப்பட்டுள்ளது. இதில் வேதாகமம் எழுதும் தேர்வு-2027 சம்பந்தமான Update –களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளலாம். இதை Play Store-ல் Prophetic words என டைப் செய்து Install செய்துகொள்ளலாம். அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த App- யை Install செய்து கொள்ளவும். https://play.google.com/store/apps/details?id=com.prophetic.words
மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்:
1.எந்த மாவட்டத்திலிருந்து (District) 500-க்கும் அதிகமானோர் முழுமையாக (Complete) எழுதி அனுப்புகின்றார்களோ, அவர்களுக்கு மட்டுமே ஆறுதல் பரிசு வழங்கப்படும் என்ற விதிமுறை இருப்பதால், உங்கள் மாவட்டத்தில் இருப்பவர்களுக்கு அதிகமாக Share செய்யுங்கள். உங்கள் மாவட்டத்தில் அதிகமானோர் எழுதி பரிசுகளை வெல்லட்டும்.
2.இந்தத் தேர்வினை எழுதி முடிப்பதற்குள், கர்த்தருக்குச் சித்தமானால், நெடுநாட்களாகவே ஆசீர்வாதம் கிடைக்காத காரியத்தில் ஒரு மாற்றம் கிடைக்கும் என்பதால், உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், உங்கள் சபை விசுவாசிகளுக்கும் தெரியப்படுத்துங்கள். அவர்களும் கர்த்தருடைய பரிசுத்த வேதவார்த்தையை எழுதி, உங்களைப்போல் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.
3.இந்தத் தேர்வினைக் குறித்த விவரங்களை உங்கள் WhatsApp Status-ல் வையுங்கள். மேலும், WhatsApp Group-களில் அதிகமாக Share செய்யுங்கள்.
4.விண்ணப்பப் படிவத்தில் உங்களுக்குத் தெரிந்தவர்களின் பெயர் மற்றும் மொபைல் எண்ணை அதற்கான இடத்தில் நிரப்பி, அவர்களுக்கும் இந்தத் தேர்வினை அறிமுகப்படுத்தலாம்.
5.தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் மூலமாக இதுவரை நடத்தப்பட்ட வேதாகமத் தேர்வுகளைப் பற்றி அறிந்துகொள்ள, கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கைக் கிளிக் செய்யுங்கள்.
கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை என்று சங்கீதம் 16:8 சொல்கின்றது. அதேபோல் வார்த்தையாக வந்த சர்வ வல்ல தேவனுடைய வார்த்தையை நீங்கள் சொந்தக்கரங்களால் எழுதி, தியானித்து, உங்கள் இருதயங்களில் ஆழமாக பதிய வைத்து, உங்களுடனே கூட வைத்திருப்பதால் நீங்கள் ஒரு போதும் அசைக்கப்படுவதில்லை. பெருங்காற்று அடித்தாலும் அசையாமல் கற்பாறையின் மேல் போடப்பட்ட அஸ்திபாரம் போல் இருப்பீர்கள். ஆமென்.
இந்த தேர்வுக்கு பதிவு செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யவும். CLICK HERE