கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே…

    தேவனுக்கே மகிமையுண்டாகட்டும்… கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்கு எங்கள் அன்பின் வாழ்த்துக்கள். தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள்  சார்பாக பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலின்படி, ஒவ்வொரு வருடமும்  மெகா வேதாகமம் எழுதும் தேர்வு நடத்தப்படுகின்றது. வீட்டிலிருந்தப்படியே கொடுக்கப்பட்டுள்ள வேதப்பகுதியை பார்த்து சொந்தக்கையால் எழுத வேண்டும். அதன்படி  2025-ம் வருடமும் நடத்தப்பட்டது. இதில் பழைய ஏற்பாட்டில் உள்ள தீர்க்கதரிசன புஸ்தகங்களான எசேக்கியல் முதல் மல்கியா வரை  வீட்டிலிருந்தபடியே பார்த்து எழுதவேண்டும் என்றும், விதிமுறைக்குட்பட்டு பிழையில்லாமல், எந்த வசனத்தையும் விடாமல் தெளிவாக எழுதிய முதல் மூன்று பேருக்கு முதல் பரிசாக நான்கு கிராம் தங்கமும்(4 grams). இரண்டாம் பரிசாக மூன்று கிராம் தங்கமும் (3 grams). மூன்றாம் பரிசாக இரண்டு கிராம் தங்கமும் (2 grams),  அதேபோல் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைக்கு உட்பட்டு, முழுமையாக  அதிக முறை எழுதும் நபருக்கு சிறப்பு பரிசாக 3000 ரூபாயும்,  கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைக்கு உட்பட்டு எந்த தாலுகாலிருந்து (Taluk) அதிகமானோர் முழுமையாக (Complete) எழுதி அனுப்புகின்றார்களோ அந்த தாலுகாவில் இருந்து அனுப்பியவர்களுக்கு மாத்திரமே ஆறுதல் பரிசு வழங்கப்படும் என்றும் 2025- ம் ஆண்டு ஜனவரி  மூன்றாம் தேதி  அறிவிக்கப்பட்டிருந்தது.   

சுமார் பன்னிரண்டாயிரத்திற்கும் (12,000) மேற்பட்டோர்  பதிவு செய்து இந்த தேர்வில் கலந்துக் கொண்டு உற்சாகமாக எழுதினார்கள். கடைசி நாள்  2025 ம் ஆண்டு டிசம்பர் 31 ம் தேதி ஆகும். அதன்படி கடைசி தேதியான 31-12-2025 – க்குள் எழுதிய நோட்டை 30 பேர் நேரிலும், 95 பேர் போஸ்ட் மூலமாகவும்,  445 பேர் கொரியர் மூலமாகவும், மொத்தம் 570 பேர் அனுப்பியுள்ளார்கள். அதில் 500 பேர் தமிழிலும், 70 பேர் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார்கள்.

முதல் சுற்றில் அனைவரின் நோட்டுகளும்  எங்களால் சரிபார்க்கப்பட்டுவிட்டது. மேலும் முதல் சுற்றில்  எல்லாம் சரியாக எழுதியுள்ளார்களா? இரண்டாம் சுற்றுக்கு தகுதியானவரா?  செய்த தவறுகள் என்னென்ன? என்றும், அதன்  Photo     போன்ற விபரங்கள் 570 பேருக்கும் தனித்தனியாக Whats App மூலமாக அனுப்பப்பட்டுள்ளது. மேலும் போன் செய்தும் தகவல் தெரிவிக்கப்பட்டது.  ஒவ்வொரு வேதாகமத்திற்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. ஒருவேளை நாங்கள் பயன்படுத்திய வேதாகமத்திற்கும் தேர்வினை எழுதியவர்களின் வேதாகமத்திற்கும் இடையே வித்தியாசங்கள் இருக்கலாம். ஆதலால், அப்படி வித்தியாசங்கள் இருந்தால் ஆதாரத்துடன் 25-07-2026  க்குள் தெரியப்படுத்த வேண்டும் என்றும், பின்பு நீங்கள் கூறும் எவ்விதமான ஆட்சேபனையும்  ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்ற எச்சரிக்கையுடன் கால அவகாசமும் கொடுக்கப்பட்டது. அதிகமான நோட்டுகளை கையாண்டு முடிவுகளை அறிவிப்பதினால் சில தவறுகள் ஏற்படலாம். இதை தவிர்பதற்காக   நீங்கள் முதல் சுற்றில் வெற்றி பெற்றும் உங்கள் பெயர் இந்த லிஸ்டில் வராமல் இருந்தாலும் அல்லது முதல் சுற்றுக்கான முடிவை இன்னும் பார்க்காமல் இருந்தாலும் எங்களுக்கு 10-08-2026 க்குள் 8608833150 என்ற எண்ணுக்கு போன் மூலமாக  தெரியப்படுத்துங்கள். இதற்கு பின்பு அதற்கு பின்பு நீங்கள் கூறும் எவ்விதமான கோரிக்கையும், ஒருவேளை நியாயமாக இருந்தாலும் எங்களால் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று கடைசி எச்சரிக்கை அறிவிப்பு கொடுக்கப்பட்டது.

      கொடுக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் அநேகர் தங்கள் ஆட்சேபனைகளை தகுந்த ஆதாரத்துடன் தெரிவித்தார்கள். சிலரது கோரிக்கைகள் ஏற்கப்பட்டது. இறுதியாக 63 பேர் இரண்டாம் சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.  அவர்களின் நோட்டுகளும் மிக மிக ஆழமாக இரண்டாம் சுற்றில் சரிபார்க்கப்பட்டன. அவர்களின் முடிவுகளும் அதன்  Photo     போன்ற விபரங்கள் 63 பேருக்கும் தனித்தனியாக Whats App மூலமாக அனுப்பப்பட்டுள்ளது. மேலும் போன் செய்தும் தகவல் தெரிவிக்கப்பட்டது. நாங்கள் பயன்படுத்திய வேதாகமத்திற்கும் தேர்வினை எழுதியவர்களின் வேதாகமத்திற்கும் இடையே  வித்தியாசங்கள் இருந்தால் ஆதாரத்துடன் 25-08-2026  க்குள் தெரியப்படுத்த வேண்டும் என்றும், பின்பு நீங்கள் கூறும் எவ்விதமான ஆட்சேபனையும்  ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்ற எச்சரிக்கையுடன் கால அவகாசமும் கொடுக்கப்பட்டது.

     இதை பயன்படுத்தி அநேகர் தங்கள் ஆட்சேபனைகளை தகுந்த ஆதாரத்துடன் தெரிவித்தார்கள். சிலரது கோரிக்கைகள் ஏற்கப்பட்டது. கடைசியில்   37 பேர் இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். சீக்கிரத்தில் இறுதி சுற்றுக்கான முடிவுகளை அறிவிக்கின்றோம். இதற்காக தொடர்ந்து ஜெபித்துக்கொள்ளுங்கள்.

இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது :

 

உங்கள் முடிவுகளை  தெரிந்துக்கொள்ள வேண்டுமா? 

(உங்கள் மொபைல் எண்ணை கீழே கொடுக்கப்பட்டுள்ள Box-ல் Type செய்யுங்கள். (குறிப்பு : மொபைல் எண்ணுடன் 91 சேர்த்து Type செய்யவும். + வேண்டாம். Example 918608833150) பின்பு Password  Type செய்யவும். உங்களுக்கான Password உங்கள் Rv எண் ஆகும். (Example Mobile No — 918608833150, Password F001 மேலும் இது உங்கள் Browser-ல்  Open ஆகவில்லையென்றால் Incognito tab – ல் Open செய்யவும்

2025 ம் வருடத்திற்கான உங்கள் முடிவுகளை அறிந்துக்கொள்ள வேண்டுமா? இந்த லிங்கை கிளிக் செய்யவும். Click Here

  மெகா வேதாகமம் எழுதும் தேர்வு-26

   தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்…! இந்த 2026 ம் வருடம் தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்கள் சார்பாக நடத்தப்படுகின்ற  மெகா வேதாகமம் எழுதும் தேர்வினை பற்றிய  விதிமுறைகளை அறிந்துக்கொள்ளவும், பதிவு செய்யவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

https://www.pwmi.in/p/bible-writing-exam-2026.html ,

 https://pwmii.in/bible-writing-exam-2026/

PW Whats App AI Chatbot : Click Here

Whats App Channel : Click Here 

You tube Channel : Click Here 

Telegram Channel : Click Here 

    மேலும் Prophetic Words Whats App AI Chatbot ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாகவும்
மிக விரைவாக தீர்க்கதரிசன செய்திகள் மற்றும் வேதாகமம் எழுதும் தேர்வு சம்பந்தமான
Update- களை பெற்றுக்கொள்ளலாம்.

2026 ம் வருட தேர்வுகளை பற்றி அறிந்துக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள் Click Here

PW Whats App AI Chatbot : https://api.whatsapp.com/send?phone=918124804845&text=Hi

Whats App Channel : https://whatsapp.com/channel/0029Va5QjlcCxoAuzjZu7c3c

You tube Channel :  https://www.youtube.com/channel/UCIzTPvb01G5b-RVZvsftEJw

Telegram Channel : https://t.me/pwmin

error: Content is protected !!