கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே…!

  கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாகட்டும்! பரலோக தேவனுடைய மகா பெரிய கிருபையினால் 2020 வருடம் வேதாகமம் எழுதும் தேர்வு ஆரம்பிக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை இடைநில்லாமல் இது பயனிக்கின்றது. இது கடந்து வரும் பாதைகளை குறித்து இதில் பார்க்கலாம்.

 

வேதாகமம் எழுதும் தேர்வு-2020   

    உம்முடைய வசனம் என் கால்களுக்கு தீபம் (சங்கீதம் 119:105) என்று உற்சாகமூட்டும் வேதவசனத்தை குறிக்கோள் வசனமாக (Motto Verse) கொண்டு 2020 ஆம் வருடம் வேதாகமம் எழுதும் தேர்வு ஆரம்பிக்கப்பட்டது.  இதில் புதிய ஏற்பாட்டில் உள்ள சுவிசேஷ புத்தகங்கள் மற்றும் வெளிப்படுத்தின விசேஷம் வேதப்பகுதியாக கொடுக்கப்பட்டது. மொத்தம் ஐந்து புத்தகங்கள், 111 அதிகாரங்கள் 4183 வசனங்க

   அந்த நேரத்தில் 2100 தேவனுடைய பிள்ளைகள் பதிவு செய்து உற்சாகமாக எழுதினார்கள்.  அதில் 433 தேவனுடைய பிள்ளைகள் மாத்திரமே எழுதி,  50 தேவனுடைய பிள்ளைகள் போஸ்ட் (Post) மூலமாக 295 தேவனுடைய பிள்ளைகள் கொரியர் (Courier) மூலமாக ஏழு தேவனுடைய பிள்ளைகள் நேரிலும் கொண்டு வந்து கொடுத்தார்கள். அவர்களின் நோட்டுகள் இரண்டு சுற்றுகளாக சரிபார்க்கப்பட்டது. முதல் சுற்றில் 245 தேவனுடைய பிள்ளைகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.  அதிலிருந்து 18 தேவனுடைய பிள்ளைகள் இரண்டாம் சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

  இறுதி சுற்றுக்கு அதிகமானோர் தேர்ந்தெடுக்கப்பட்டதால் பரலோக தேவன் கொடுத்த ஆலோசனையின்படி, பரிசுத்த வேதவசனங்களை உறுதியான சான்றாக வைத்து, குலுக்கல் முறையில் பரிசுக்கு தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இன்று வரை உள்ள எல்லா தேர்வுகளிலும் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகின்றது.

   அதன்படி இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 18 பேரிலிருந்து திருநெல்வேலி மாவட்டத்தினை சேர்ந்த Mrs.P.Sathiya Devi (RvA286 Qz1002 ) என்ற சகோதரி தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அவருக்கு அறிவித்தபடி ஒரு சவரன் தங்கம் பரிசாக வழங்கப்பட்டது. தேர்வினை எழுதிய மற்றவர்களை மல்கியா 3:10  இன் படி பரலோக தேவன்தாமே வானத்தின் பல கணிகளை திறந்து ஆசீர்வதித்தார். அநேகர் தேவன் கொடுத்த ஆசீர்வாதத்தினை பெற்றுக் கொண்டார்கள்.

 

வேதாகமம் எழுதும் தேர்வு-2021  

   2020 ஆம் வருடம் நடத்தப்பட்ட தேர்வு அநேகருக்கு ஆசீர்வாதமாக இருந்ததினால் 2021 ஆம் வருடமும் தேர்வினை நடத்தும்படி பரலோக தேவன் ஆணையிட்டார். அந்த ஆணைக்கு கீழ்ப்படிவது என் மீது விழுந்த கடமை என்பதால், 2021 ஆம் வருடமும் தேர்வினை நடத்த ஆயத்தம் செய்யப்பட்டது. 2020 ஆம் வருடம் நடத்தப்பட்ட தேர்வில் கலந்து கொண்டவர்கள் ஒரே ஒரு பரிசு மட்டுமே கொடுப்பது எங்களுக்கு சோர்வினை தருகின்றது என்று கூறினார்கள். இதனால் மூன்று பரிசுகள் வழங்கலாம் என்று தீர்மானிக்கப்பட்டது.

  அதன்படி முதல் பரிசு  ரூபாய் முப்பதாயிரம் (30,000), இரண்டாம் பரிசு ரூபாய் இருபதாயிரம் (20,000), மூன்றாம் பரிசு ரூபாய் பத்தாயிரம் (10,000) என்று அறிவிக்கப்பட்டது. புதிய ஏற்பாட்டில் உள்ள நிருபங்கள் அனைத்தையும் எழுத வேண்டும் என்பதுதான் வேதப்பகுதி.  மொத்தம் 21 புத்தகங்கள்,  121 அதிகாரங்கள், 2767 வேத வசனங்கள் ஆகும்.

  இந்த வருடத்தில் வேதாகமம் எழுதும் தேர்வினை குறித்து அநேகருக்கு தெரிய ஆரம்பித்தது.  சுமார் ஆறாயிரம் (6,000) தேவனுடைய பிள்ளைகள் பதிவு செய்தார்கள். உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை. (சங்கீதம் 119:165)  என்ற வேத வசனத்தை குறிக்கோள் வசனமாக (Motto Verse) கொண்டு பதிவு செய்ததில், 766 தேவனுடைய பிள்ளைகள் கொரியர் (Courier)  மூலமாகவும், 184 தேவனுடைய பிள்ளைகள் போஸ்ட் (Post)  மூலமாகவும், 92 தேவனுடைய பிள்ளைகள் நேரிலும் கொண்டு வந்து மொத்தம் 1040 தேவனுடைய பிள்ளைகள் அனுப்பினார்கள்.

 எழுத்துப்பிழை உள்ளதா? வசனப் பிழை உள்ளதா?… எல்லா வசனங்களும் சரியாக எழுதி இருக்கின்றார்களா? அடித்தல் திருத்தல் உள்ளதா? நிறுத்தற்குறிகளை சரியாக வைத்துள்ளார்களா? என்று இரண்டு சுற்றுக்களாக சரிபார்க்கப்பட்டது. இதே போல்தான் இன்று வரை சரிபார்க்கப்படுகின்றது. எல்லா தேர்வுகளுக்கும் ஆட்களை நியமனம் செய்து மிக ஆழமாக சரிபார்க்கப்படுகின்றது.     

      முதல் சுற்றில் வெற்றிப்பெற்று இரண்டாம் சுற்றுக்கு 19 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அவர்களின் நோட் இன்னும் ஆழமாக சரிபார்க்கப்பட்டது. அதிலிருந்து 18 பேர் கடைசி சுற்றாகிய இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இறுதி சுற்றில் அதிகமானோர் இருப்பதினால் பரிசு பெறும் மூன்று பேர் சீட்டு போட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

   முதல் பரிசு ஈரோடு மாவட்டத்தினை சேர்ந்த Ms. V.Silviya Celine க்கும், இரண்டாம் பரிசு சேலம் மாவட்டத்தினை சேர்ந்த Dr.A.Jemi Bai,(RvB535, Qz220), மூன்றாம் பரிசு திருப்பூர் மாவட்டத்தினை Ms. Catherine Samuel அவர்களுக்கு வழங்கப்பட்டது.

    கர்த்தருடைய பரிசுத்த வேதவார்த்தையை எழுத அர்ப்பணித்த மற்றவர்களை சர்வவல்ல தேவன்  ’நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் (ஆதியாகமம் 12:2,3)’  என்ற வேத வசனத்தின் படி உற்சாகம் கொண்டு தேர்வினை எழுதிய அனைவரையும் பரலோக தேவன் ஆசீர்வதித்தார்.

 

 

வேதாகமம் எழுதும் தேர்வு-2022

   பரிசுத்த வேதத்தினை எழுதியவர்களின் ஆசீர்வாதங்கள் தேசத்தில் பெருகின. எனவே, வேதாகமத்தை எழுதுபவர்களின் எண்ணிக்கையும் பெருகியது. இந்த வேதாகமம் எழுதும் தேர்வு அநேக தேவனுடைய பிள்ளைகளுக்கு மிகுந்த ஆசீர்வாதமாக இருந்ததினால் தொடர்ந்து இந்த தேர்வினை நடத்த பரலோக தேவன் விருப்பம் கொண்டார். ஆதலால் 2022 ஆம் வருடமும் இந்த தேர்வு நடத்தப்பட்டது.

     ஒவ்வொரு தேர்வுக்கும் தேவ சமூகத்தில் காத்திருக்கும் போது ஒரு குறிக்கோள் வசனத்தையும் (Motto Verse) அந்த தேர்வுக்கு பரலோக தேவன் தரும் ஆசீர்வாதத்தினை குறிக்கும் விதமாக ஒரு வாக்குத்தத்த  வசனத்தையும் (Promise Verse) கொடுப்பார். அதன்படி 2022 ஆம் வருடம் உம்முடைய சத்தியத்தினாலே அவர்களை பரிசுத்தமாக்கும் உம்முடைய வசனமே சத்தியம் (யோவான் 17:17) என்ற இந்த  வசனத்தினை பரலோக தேவன் குறிக்கோள் வசனமாக (Motto Verse)  கொடுத்தார்.

    பழைய ஏற்பாட்டில் உள்ள சங்கீதம் மற்றும் நீதிமொழிகள் வேதப் பகுதிகளாக கொடுக்கப்பட்டது. இதில் மொத்தம்  2 புத்தகங்களும், 181 அதிகாரங்களும், 3376 வசனங்களும் உள்ளன. சுமார் 10,000 பேர் இந்த தேர்வுக்காக பதிவு செய்தார்கள். வாஞ்சையோடு எல்லாரும் எழுதினார்கள்.

     தேவனுடைய வசனத்தை வாசித்து தியானிக்கின்றவர்களை பிசாசு தடை செய்வான். அப்படி இருக்க எழுதி தியானிக்கின்றவர்களுக்கு எவ்வளவு தடைகள் வரும்.  அப்படி பிசாசு கொண்டு வந்த தடைகளை உடைத்து 842 பேர் எழுதி அனுப்பினார்கள். அனுப்புவதற்கு 636 பேர் கொரியரையும்(Courier), 156 பேர் போஸ்டையும் பயன்படுத்தினார்கள். 50 பேர் நேரில் கொண்டு வந்து கொடுத்தார்கள். இதில் 736 பேர் தமிழ் மொழியிலும், 112 பேர் ஆங்கில மொழியிலும் எழுதியிருந்தார்கள்.

     எல்லா நோட்டுகளும் சரிபார்க்கப்பட்டன 13 பேர் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்கள். அதே 13 பேர்தான் இறுதி சுற்றுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். கடைசியாக தூத்துக்குடி மாவட்டத்தினை சேர்ந்த Mrs.A. Johncy Mary. ( Qz2842 , RvC576) என்ற சகோதரி தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

    இந்த வருடம் முதல் அனுப்பும் நபருக்கு ரூபாய்  ஆயிரம்(1,000) என்றும், சிறந்த Presentation-கு சிறப்பு பரிசாக ரூபாய்  இரண்டாயிரம் (2,000) என்றும், அதிக முறை எழுதும் நபருக்கு சிறப்பு பரிசாக ரூபாய் மூன்றாயிரம் (3,000) என்றும், குடும்பத்தில் அதிக உறுப்பினர்கள் எழுதி இருந்தால் அவர்களுக்கு ரூபாய் நான்காயிரம் (4,000) என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. எனவே, சிறப்பு பரிசுக்கான நபர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

  முதலில் எழுதி அனுப்பியவர்களுக்கான பரிசினையும் அதிக முறை எழுதியதற்கான பரிசினையும் தென்காசி மாவட்டத்தினை சேர்ந்த Mrs. S.Asha Threse (Qz2082) அவர்களுக்கு வழங்கப்பட்டது. அவர்கள் ஐந்து முறை(RvC001, 131, 334, 809, 810) எழுதி அனுப்பியிருந்தார்கள்.   சிறந்த Presentation கான பரிசு தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த Mr. Christopher G (Qz1988 , RvC824) என்பவருக்கு வழங்கப்பட்டது. குடும்ப உறுப்பினர்களில்   15 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் சரியாக எழுதியிருந்தால் அக்குடும்பத்திற்கு சிறப்பு பரிசுக்காக Mrs. R. Chitra Justin அவர்களுடைய குடும்பம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அக்குடும்பத்தில் மூன்று பேர் ஆறு முறை(RvC59, 581, 582,679,680,681)) எழுதியிருந்தார்கள்.

   எல்லா வேதாகமம் எழுதும் தேர்விலும் தேர்ந்தெடுக்கப்பட்ட எல்லாருக்கும் பரிசுகளை வீடுகளுக்கு கொண்டு சென்று கொடுப்பதுதான் வழக்கம். இன்று வரை இதே முறைதான் பின்பற்றப்படுகின்றது. ஆனால், அதிக உறுப்பினர்கள் எழுதிய குடும்பத்திற்கான பரிசினை பெற தேர்ந்தெடுக்கப்பட்ட  குடும்பத்தினர் வெளிமாநிலத்தில் இருந்தார்கள்.   எனவே, அவர்களுக்கு நேரில் கொண்டு கொடுக்க முடியவில்லை.  G-PAY மூலமாக ரூபாய் 4,000 அனுப்பப்பட்டது. அதை அவர்கள் சந்தோஷமாக பெற்றுக் கொண்டார்கள்.

    தேர்வினை எழுதிய மற்ற அனைவரையும் பரலோக தேவன்தாமே மல்கியா 3:10 ன்படி ஆசீர்வதித்தார். கர்த்தருடைய நாமம் மாத்திரம் மகிமைப்பட்டது.

 

வேதாகமம் எழுதும் தேர்வு-2023

     2023 ஆம் வருடமும் மெகா வேதாகமும் எழுதும் தேர்வு நடத்தப்பட்டது. வருடம் ஆரம்பித்த முதலாம் தேதியில் இருந்தே இந்த வருடம் Exam உண்டா? எந்த Portion என அநேகர் கேட்க ஆரம்பித்து விட்டார்கள். இந்த ஊழியத்தின் மூலமாக வருடம் வருடம் Exam நடத்தப்படும் என்பது அனைவருடைய இருதயத்திலும் ஆழமாக பதிந்து விட்டது. அதன்படி அநேகமாயிரம் பொன் வெள்ளியைப்பார்க்கிலும், நீர் விளம்பின வேதமே எனக்கு நலம். (சங்கீதம் 119:72) என்ற வசனத்தை மையமாகக் கொண்டு பழைய ஏற்பாட்டில் உள்ள முதல் ஐந்து புத்தகங்கள் வேதப் பகுதிகளாக கொடுக்கப்பட்டது. இதில் மொத்தம் 187 அதிகாரங்களும் 5852 வசனங்களும் உள்ளன. சுமார் 11,000 பேர் பதிவு செய்து மிக வாஞ்சையோடு எழுதினார்கள். இதுவரை நடத்திய Exam களில் மிக அதிக வசனங்கள் உள்ள Exam இதுதான்.

    இருப்பினும் 277 பேர் மிக ஆர்வமாக எழுதி அனுப்பி வைத்தார்கள். இதில் 247 பேர் தமிழிலும், 30 பேர் ஆங்கிலத்திலும் எழுதியிருந்தார்கள். 223 பேர் கொரியர் மூலமாகவும், 36 பேர் போஸ்ட் மூலமாகவும், 18 பேர் நேரிலும் கொண்டுவந்து நோட்டினை கொடுத்தார்கள். ஆட்களை நியமனம் செய்து நோட்டுகள் சரிபார்க்கப்பட்டன. ஆம் இன்று வரை நடக்கின்ற Exam -க்கும் சம்பளம் கொடுத்து ஆட்களை நியமித்து திருத்தப்படுகின்றது.  அப்படி நியமிக்கப்பட்டவர்களும் உண்மையாக தைரியமாக அர்ப்பணிப்போடு தேர்வுக்கான நோட்டுகளை திருத்தும் வேலைகளை செய்கின்றார்கள்.

 அதன்படி, முதல் சுற்றில் வெற்றிப்பெற்ற 19 பேர் இரண்டாம் சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அவர்களின் நோட்டுகள் மிக ஆழமாக சரிபார்க்கப்பட்டது. அப்படி சரிபார்த்தும் 19 பேர் நோட்டுகளிலும் எந்த ஒரு தவறும் இல்லையென்பதால்  இறுதி சுற்றுக்கு   தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அதிலிருந்து சீட்டு போட்டு தூத்துக்குடி மாவட்டத்தினை சேர்ந்த Mrs. Nina Shiny. (Qz7597, RvD266)  என்ற சகோதரி தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அவர்களுக்கு ஒரு சவரன் தங்கம் பரிசாக வழங்கப்பட்டது.

      அதிக முறை எழுதும் நபருக்கான சிறப்பு பரிசு ரூபாய் 3000 அறிவிக்கப்பட்டிருந்தது.  அதன்படி Ms. S.Angel Packiam  (Qz2647)   என்ற சகோதரி இரண்டு முறை எழுதி இந்த பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அவர்களுக்கும் G-pay மூலமாக பரிசு தொகை அனுப்பப்பட்டது.

    இந்த Exam-ல் தான் முதல்முறையாக அதிகமானோர் எழுதும் மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு ஆறுதல் பரிசு உண்டு என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து அதிகமானோர் எழுதி அனுப்பி இருந்தார்கள். அவர்களுக்கான பரிசு நேரில் சென்று கொடுக்கப்பட்டது.

  தேர்வில் கலந்து கொண்டு எழுதிய மற்றவர்களை பரலோக தேவன்தாமே உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்; உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்; இது கர்த்தருடைய ஊழியக்காரரின் சுதந்தரமும் என்னாலுண்டான அவர்களுடைய நீதியுமாயிருக்கிறதென்று கர்த்தர் சொல்லுகிறார். (ஏசாயா 54:17) என்ற வசனத்தின் படி ஆசீர்வதித்தார்.

 

வேதாகமம் எழுதும் தேர்வு-2024

  அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார். (சங்கீதம் 107:20) என்ற வசனத்தை மையமாக வைத்து 2024 ஆம் வருடமும் வேதாகமம் எழுதும் தேர்வு நடத்தப்பட்டது. பழைய ஏற்பாட்டில் உள்ள  ஏசாயா, எரேமியா, புலம்பல் ஆகிய  மூன்று தீர்க்கதரிசன  புத்தகங்களும் வேதப்பகுதியாக கொடுக்கப்பட்டன. இவற்றுள் 123 அதிகாரங்களும், 2810 வசனங்களும் உள்ளன.

   எப்பொழுதும் ஒரு நபருக்கு ஒரு சவரன் தங்கத்தினை பரிசாக கொடுப்பது வழக்கம்.  இந்த வருடத்தில் மூன்று பரிசாக பிரித்து முதல் பரிசாக நான்கு சவரன் தங்கம், இரண்டாம் பரிசாக மூன்று சவரன் தங்கம், மூன்றாவது பரிசாக இரண்டு சவரன் தங்கம் கொடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதேப்போல் எந்த மாவட்டத்தில் இருந்து அதிகமானோர் எழுதுகின்றார்களோ அவர்களுக்கு சிறப்பு ஆறுதல் பரிசு உண்டு என்றும், இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்படும் அனைவருக்கும் சிறப்பு பரிசு உண்டு என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

   சுமார் பன்னிரண்டாயிரத்திற்கும் (12,000) மேற்பட்டோர்   பதிவு செய்து தேர்வினை மிக உற்சாகமாக எழுதினார்கள். மொத்தம் 645 பேர் எழுதி அனுப்பினார்கள். இதில் 564 பேர் தமிழிலும், 81 பேர் ஆங்கிலத்திலும் எழுதியிருந்தார்கள். 223 பேர் கொரியர் மூலமாகவும், 36 பேர் போஸ்ட் மூலமாகவும், 18 பேர் நேரிலும் கொண்டுவந்து நோட்டினை கொடுத்தார்கள். அவர்களின் நோட்டுகள் இரண்டு சுற்றுகளாக சரிப்பார்க்கப்பட்டது.

    முதல் சுற்றில் 44 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அவர்களின் நோட் மிக ஆழமாக இரண்டாம் சுற்றில் சரிபார்க்கப்பட்டது. 44 பேருக்கும் எந்தத் தவறும் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, சீட்டு போட்டு தேர்ந்தெடுக்கப்படும் இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

 இந்த முறை மூன்று நபர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் படி முதல் பரிசுக்கு கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த Mrs. Latha Rajendran,( Qz1135, RvE504)  அவர்களும், இரண்டாம் பரிசுக்கு  திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த Mrs. T.Jeba (Qz5968, RvE346)  அவர்களும் மூன்றாம் பரிசுக்கு தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த Mrs. J.Ragles sam(Qz3805, RvE359)  அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். பரிசினை பெறுகின்ற அனைவருக்கும் நேரில் சென்று பரிசுகள் வழங்கப்பட்டன.

    மேலும், கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைக்கு உட்பட்டு, முழுமையாக அதிக முறை எழுதும் நபருக்கு சிறப்பு பரிசாக 3000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.  கோயம்புத்தூர்  மாவட்டத்தினை சேர்ந்த Ms. S.Angel Packiam  (Qz2647) அவர்கள்  ஐந்து முறை எழுதி அனுப்பியிருந்தார்கள். வேறு யாரும் இவ்வளவு முறை எழுதவில்லை. எனவே, அதிக முறை எழுதியதற்கான சிறப்பு பரிசு அவர்களுக்கே வழங்கப்படுகின்றது. ஐந்து முறை அனுப்பிய அவர்களுடைய நோட் எண்  E509, E510, E511, E512, E513,   ஆகும். அவருக்கு சீக்கிரத்தில் பரிசுதொகை வழங்கப்படும். கடந்த 2023 ம் ஆண்டும் அதிக முறை எழுதியதற்கான சிறப்பு பரிசினை இந்த சகோதரி பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

      எந்த மாவட்டத்திலிருந்து (District) அதிகமானோர் முழுமையாக (Complete) எழுதி அனுப்புகின்றார்களோ அந்த மாவட்டத்தில் இருந்து அனுப்பியவர்களுக்கு மாத்திரமே ஆறுதல் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து 114 பேரும், தூத்துக்குடியிலிருந்து 56 பேரும்,  சென்னையிலிருந்து 50 பேரும், இதர மாவட்டங்களிருந்து இதற்கு குறைவாகவே அனுப்பியிருந்தார்கள். ஆதலால்,  திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து அனுப்பியவர்கள் அதிகமாக இருந்ததால் அவர்களுக்கான பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் கொரியர் மூலமாக அனுப்பட்டன. மேலும் இந்த வருடத்தில்தான் இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்படும் அனைவருக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் கொரியர் மூலமாக அனுப்பட்டன. சரியான முகவரி அனுப்பாத ஒரு சிலருக்கு இன்னும் பரிசுகள் அனுப்பப்படவில்லை. சீக்கிரத்தில் அவர்களுக்கு அனுப்பப்படும். தேர்வினை எழுதிய மற்றவர்கள்…. அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். (ஏசாயா 53:5) என்ற வாக்குத்தத்தின் படி பரலோக தேவனுடைய ஆசீர்வாதத்தினையும் சுகத்தினையும் பெற்றுக்கொண்டார்கள்.

  

2025

  பரிசுத்த வேத வசனத்தினை எழுத எழுத தேவனுடைய பிள்ளைகளின் வாழ்க்கையில் உள்ள கட்டுகள் உடைக்கப்பட்டன. அனேகர் பரலோக தேவன் கொடுக்கும் விடுதலையை பெற்றுக் கொண்டார்கள். எனவே, வேதாகமம் எழுதும் தேர்வினை நடத்துவதில் பரலோக தேவன் மிகவும் பிரியமாக இருக்கின்றார். ஆதலால் 2025 ஆம் வருடமும் வேதாகமம் எழுதும் தேர்வு நடத்தப்பட்டது. சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும். (யோவான் 8:32) என்ற வசனத்தை மைய வசனமாக கொண்டு பழைய ஏற்பாட்டில் தீர்க்கதரிசன புஸ்தகங்களான எசேக்கியல் முதல் மல்கியா வரை வேதப்பகுதியாக கொடுக்கப்பட்டது. மொத்தம் 14 புஸ்தகங்கள் ஆகும். அவற்றுள்  127 அதிகாரங்களும் 2680 வசனங்களும் உள்ளன.

   இந்த வருடத்தில் சென்ற 2024 ம் வருடத்தினை போல் முதல் பரிசாக நான்கு சவரன் தங்கம், இரண்டாம் பரிசாக மூன்று சவரன் தங்கம், மூன்றாவது பரிசாக இரண்டு சவரன் தங்கம் கொடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. சிறப்பு ஆறுதல் பரிசாக எந்த தாலுகாலிருந்து (Taluk) அதிகமானோர் முழுமையாக (Complete) எழுதி அனுப்புகின்றார்களோ  அவர்களுக்கு மாத்திரமே  வழங்கப்படும் என்றும்,  அதிக முறை எழுதும் நபருக்கு சிறப்பு பரிசாக ரூபாய் 3000  என்றும், இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்படும் அனைவருக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

  பரிசுத்த ஆவியானவரால் தூண்டப்பட்டு அனேகர் எழுதினார்கள். மொத்தம் 570 பேர் எழுதி அனுப்பினார்கள். இதில் 500 பேர் தமிழிலும், 70 பேர் ஆங்கிலத்திலும் எழுதியிருந்தார்கள். 445 பேர் கொரியர் மூலமாகவும், 95 பேர் போஸ்ட் மூலமாகவும், 30 பேர் நேரிலும் கொண்டுவந்து நோட்டினை கொடுத்தார்கள்.

  இப்பொழுது அவர்களின் நோட்டுகள் முதல் சுற்றில் சரிபார்க்கப்படுகின்றன. சீக்கிரத்தில் எல்லா சுற்றுக்கான முடிவுகளும் அறிவிக்கப்படும். இதற்காக ஊக்கமாக ஜெபித்து கொள்ளுங்கள்.

 

2026

 கர்த்தருடைய மகா பெரிய கிருபையினால் இந்த 2026-ம் வருடத்திலும் வேதாகமம் எழுதும் தேர்வு நடத்தப்படுகின்றது. இது ஏழாவது ஆண்டு நடத்தப்படும் தேர்வு ஆகும். இதில் பழைய ஏற்பாட்டில் உள்ள யோசுவா புஸ்தகம்  முதல் 2 சாமுவேல் வரை  வேதப்பகுதியாக கொடுக்கப்பட்டுள்ளன. இதில்  5 புத்தகங்கள் உள்ளன. அவற்றுள் 104 அதிகாரங்கள்.  2866 வசனங்கள் உள்ளன. இதற்கான அறிவிப்பு 2026 ம் வருடம் ஜனவரி மாதம் 5 –ம் தேதி (05-01-2026) வெளியிடப்பட்டது. எழுதிய நோட் வந்து சேர வேண்டிய கடைசி நாள் :  2026 ம் வருடம் டிசம்பர் மாதம்  31 –ம் தேதி (31-12-2026) ஆகும். இதில் கொடுக்கப்பட்டுள்ள  விதிமுறைக்குட்பட்டு பிழையில்லாமல், எந்த ஒரு வசனத்தையும் விடாமல் தெளிவாக எழுதிய முதல் மூன்று பேருக்கு,  முதல் பரிசாக ரூபாய்  30,000, இரண்டாம் பரிசாக ரூபாய் 20,000, மூன்றாம் பரிசாக ரூபாய் 10,000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 நாங்கள் எழுதி அனுப்பிய  நோட்டுகளை என்ன செய்வீர்கள்?

   நாங்கள் எழுதி அனுப்பிய நோட் திரும்ப கிடைக்குமா? அந்த நோட்டுகளை என்ன செய்வீர்கள்?” என்பதாய் அநேகர் கேட்பார்கள். சிலர் ”பைபிள் இல்லாத மக்களுக்கு படிக்கக் கொடுங்கள்” என்று ஆலோசனைக் கூறினார்கள். ஆனால், அதில் எனக்கு உடன்பாடில்லை. சொந்த கையினால் எழுதிய வேதத்தில் அநேக தவறுகள் இருக்கலாம். அதை மற்றவர்கள் படிக்க நேரிடும். அது பெரிய ஆபத்தாகும். வேத வசனங்கள் தவறுதலாக புரிந்துக்கொள்ளப்படும். ஆதலால், எழுதி அனுப்பிய நோட்டை கொரியர் அல்லது போஸ்ட் அவர்கள் முகவரிக்கே  திரும்ப அனுப்புவதற்கான செலவுத்தொகையினை அனுப்பியவர்களுக்கு அது திரும்ப அனுப்பப்படுகின்றது. அவர்கள் எங்களுக்கு திரும்ப அனுப்ப வேண்டாம் என்று சொன்ன நோட்டை அறக்கட்டளை( Prophetic WordsTrust) மூலமாக  ஏழை எளிய மக்களின் உதவிக்காகவும், படிப்பு செலவுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றது.

    அதன்படி கணவனை இழந்து மூன்று சிறு பிள்ளைகளுடன் வாழும் தென்காசி மாவட்டத்தினை சேர்ந்த சகோதரி P.கலாராணியின் மூன்று குழந்தைகளின் படிப்பு செலவுக்காக 2021-ம் வருடம் ரூபாய் 20,000 வழங்கப்பட்டது. மேலும் தென்காசி மாவட்டத்தினை சேர்ந்த சகோதரி N.Josline படிப்பு செலவுக்காக 2025-ம் வருடம் ரூபாய் 5,000 வழங்கப்பட்டது. இன்னும் பரலோக தேவனுடைய சித்தத்தின்படி தகுதியான நபர்களுக்கு உதவிகள் வழங்கப்படும்.

    அனேக தேவனுடைய பிள்ளைகள் …பனித்துளிகள் புல்லின்மேல் இறங்குவதுபோல, என் வசனம் இறங்கும். (உபாகமம் 32:2) என்ற வேதவசனத்தை மையமாக கொண்டு  பதிவு செய்து எழுதி கொண்டிருக்கின்றார்கள். பரலோக தேவனுடைய வேதத்தினை மறந்து, வாசித்து தியானிக்காமல், நேரத்தை வீனடிக்கும் மக்கள் வாழ்கின்ற இந்த நாட்களில்  கர்த்தருடைய பரிசுத்த வார்த்தையை தன்னுடைய சொந்தக்கரங்களால் எழுதி தியானிக்க  உங்களை அன்புடன் அழைக்கின்றேன்.  பரலோக தேவன் தாமே ”நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப்பண்ணுவேன்” என்ற வாக்குத்தத்தின் படி (ஆதியாகமம் 22:17 பலுகி பெருகச்செய்வாராக.

 

Mega Bible Writing Exam Archives (2020–2026)

YearPortionBooksChaptersVersesRegisteredSubmittedTop Prize
2020Gospels + Revelation5111418321004338 Grams of Gold
2021New Testament Epistles21121276760001040First Prize – ₹30,000
Second Prize – ₹20,000
Third Prize – ₹10,000
2022Gospels + Revelation5111418321004338 Grams of Gold
2023Psalms & Proverbs2181337610,0008428 Grams of Gold
2024Isaiah, Jeremiah, Lamentations3123281012,000645First Prize – 4 Grams of Gold
Second Prize – 3 Grams of Gold
Third Prize – 2 Grams of Gold
2025Ezekiel – Malachi14127268012,000+570First Prize – 4 Grams of Gold
Second Prize – 3 Grams of Gold
Third Prize – 2 Grams of Gold
2026Joshua – 2 Samuel51042866OngoingOngoingFirst Prize – ₹30,000
Second Prize – ₹20,000
Third Prize – ₹10,000

Prize Winners – Mega Bible Writing Examination (2020–2026)

YearPrize DetailsWinner NameDistrict
20208 Grams of GoldMrs. P. Sathiya DeviTirunelveli
2021First Prize – ₹30,000
Second Prize – ₹20,000
Third Prize – ₹10,000
Ms. V. Silviya Celine
Dr. A. Jemi Bai
Ms. Catherine Samuel
Erode
Salem
Tiruppur
20228 Grams of GoldMrs. A. Johncy MaryThoothukudi
20238 Grams of GoldMrs. Nina ShinyThoothukudi
2024First Prize – 4 Grams of Gold
Second Prize – 3 Grams of Gold
Third Prize – 2 Grams of Gold
Mrs. Latha Rajendran
Mrs. T.Jeba
Mrs. J.Ragles sam
kanniyakumari
Tirunelveli
Thoothukudi
2025First Prize – 4 Grams of Gold
Second Prize – 3 Grams of Gold
Third Prize – 2 Grams of Gold
Evaluation Ongoing
2026First Prize – ₹30,000
Second Prize – ₹20,000
Third Prize – ₹10,000
Ongoing
error: Content is protected !!