தீர்க்கதரிசன வாக்குத்தத்த செய்தி
“சிங்கத்தின் கைக்கும், கரடியின் கைக்கும் என்னைத் தப்புவித்த கர்த்தர், இந்தப் பெலிஸ்தியனின் கைக்கும் என்னைத் தப்புவிப்பார்.”
– 1 சாமுவேல் 17:37
1 சாமுவேல் 17:37-ல், “என்னைச் சிங்கத்தின் கைக்கும், கரடியின் கைக்கும் தப்புவித்த கர்த்தர், இந்தப் பெலிஸ்தியனின் கைக்கும் என்னைத் தப்புவிப்பார்” என்று தேவனுடைய இருதயத்திற்கேற்றவனாகிய தாவீது விசுவாச அறிக்கையைச் செய்கிறான்.
தாவீதின் வாழ்க்கையிலும் பெலிஸ்தியனிடமிருந்து விடுதலை பெற வேண்டிய ஒரு சூழ்நிலை இருந்தது. அந்தப் போராட்டத்தைக் கடந்து வந்த பிறகே அவன் உயர்வை அடைந்தான். அதுபோல இன்றும் நம்முடைய வாழ்க்கையிலும், குடும்பத்திலும், ஊழியத்திலும், வேலை செய்யும் இடத்திலும், பெலிஸ்தியர்கள் இருக்கலாம். அவர்களின் கையில் நாம் சிக்கினால் முன்னேற முடியாது என்று தோன்றலாம். ஆனால், இந்த மாதத்தில் பரலோக தேவன் அவர்களின் கையிலிருந்து நம்மை நிச்சயமாகத் தப்புவிப்பார்.
“யார் இந்தப் பெலிஸ்தியன்?”
அவன் எந்த வடிவத்தில் நம்முடைய வாழ்க்கையில் செயல்படுகிறான்? என்பதை வேதாகமத்தில் ஆராய்ந்து பார்த்தால், இந்த பெலிஸ்தியனின் பெயர் கோலியாத் ஆகும். அவன் காத் என்னும் பெலிஸ்திய பட்டணத்தைச் சேர்ந்தவன். சிறுவயதிலிருந்தே யுத்த வீரனாக இருந்தான்.
இவன் இஸ்ரேவேலருக்கு 1.பயமுறுத்துகின்ற பெலிஸ்தியனாகவும், 2.புகழை(Credit) எடுக்கின்ற பெலிஸ்தியனாகவும், 3.அசட்டை பண்ணுகின்ற பெலிஸ்தியனாகவும், 4.சபிக்கின்ற பெலிஸ்தியனாகவும், 5. மாந்தீரீகம் செய்கின்ற பெலிஸ்தியனாகவும் இருந்தான்.
இப்படிப்பட்ட பெலிஸ்தியனின் கையிலிருந்துதான் இந்த மாதத்தில் பரலோக தேவன் தப்புவிப்பேன் என்று வாக்கு கொடுத்துள்ளார். அவனுடைய கையிலிருந்து தேவன் எவ்வாறு விடுவிக்கிறார்? என்பதை இந்த வாக்குத்தத்த செய்தியின் மூலம் தியானிக்கலாம்.
1.பயமுறுத்துகின்ற பெலிஸ்தியன் :
இஸ்ரவேலர் படைகளும் பெலிஸ்தரின் படைகளும் யுத்தத்திற்கு அணிவகுத்து நிற்கும்போது, இந்த கோலியாத் அவர்கள் நடுவே வந்து நிற்பான். அவன் வந்து இஸ்ரவேலரின் சேனைகளை இகழ்ந்து பேசி, தன்னுடைய வார்த்தைகளால் அவர்களை கலங்கப்பண்ணுவான். அவனுடைய வார்த்தைகளைக் கேட்ட சவுலும் இஸ்ரவேலரும் மிகவும் கலங்கி பயந்தார்கள்.
அதேபோல், நம்முடைய வாழ்க்கையிலும் நம்மைக் கலங்கச் செய்யும், பயமுறுத்தும், தாழ்வாக எண்ண வைக்கும் வார்த்தைகளை பேசும் மனிதர்கள் இருக்கலாம். அருவருப்பான வார்த்தைகளை பேசி தூஷிக்கலாம். அவர்களே உங்கள் வாழ்க்கையில் உள்ள “பயமுறுத்துகின்ற பெலிஸ்தியர்கள்”. அவர்களின் திட்டங்களிலிருந்தும், சூழ்ச்சிகளிலிருந்தும் கர்த்தர் உங்களைத் தப்புவித்து பாதுகாப்பார். அவர்கள் இனி உங்கள் வாழ்க்கைகுள் வர முடியாது.
2.புகழை(Credit) எடுக்கின்ற பெலிஸ்தியன்:
கோலியாத்தின் தந்திரம் என்னவென்றால், முழு இஸ்ரவேல் படையோடு போரிடாமல், ஒருவனோடு மட்டும் போரிட்டு, அந்த ஒருவனைத் தோற்கடித்து முழு தேசத்தையும் அடிமைப்படுத்துவதாகும்.
இன்றும் வேலை செய்யும் இடங்களிலும், தொழில்களிலும் இப்படிப்பட்ட “கோலியாத்துகள்” இருக்கிறார்கள். நாம் இரவும் பகலும் உழைத்து ஒரு காரியத்தை நிறைவேற்றியிருந்தாலும், அவர்கள் எதுவும் செய்யாமல் அந்தப் புகழைத் தங்களுக்கே எடுத்துக்கொள்ள முயற்சிப்பார்கள். “அனைத்தையும் நான்தான் செய்தேன்” என்று காட்டிக்கொள்ள விரும்புவார்கள். இவர்கள் தான் ”புகழை(Credit) எடுக்கின்ற பெலிஸ்தர்கள்” இப்படிப்பட்டவர்களின் கையிலிருந்து தேவன் உங்களைப் பாதுகாப்பார். இந்த மாதத்தில் உங்கள் உழைப்பிற்குரிய மகிமையையும், கனியையும் வேறு யாரும் பறிக்க முடியாதபடி கர்த்தர் காத்துக்கொள்வார்.
3.அசட்டை பண்ணுகின்ற பெலிஸ்தியன்:
தாவீது கோலியாத்தோடு போரிடச் சென்றபோது, கோலியாத் அவனை நேருக்கு நேர் பார்த்தான். தாவீது இளைஞனாகவும், அழகான தோற்றமுடையவனாகவும் இருந்தான். அவனைப் பார்த்த கோலியாத் அவனை அலட்சியப்படுத்தினான். தாவீதுக்கு இஸ்ரேவேல் மேல் இராஜாவாக மாறுவதற்கான அபிஷேகம் இருந்தது. பின் நாட்களில் இஸ்ரேவேலின் இராஜாவாக உயர்த்தப்பட்டான். அது தெரியாமல் அவனை அசட்டை பண்ணினான்.
அதேபோல், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்டெடுக்கப்பட்ட உங்கள் மேல் பரலோக தேவன் கிருபைகளை வைத்துள்ளார் அபிஷேகத்தையும் வைத்துள்ளார். பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குள் இருக்கின்றார். அது தெரியாமல் உங்கள்மேல் வைத்திருக்கும் கிருபையையும் அபிஷேகத்தையும் சிலர் மதிக்காமல், உங்களை அசட்டையாக பார்க்கின்ற பெலிஸ்தியர்கள் இருப்பார்கள்.
நீங்கள் சொல்லும் வார்த்தைகளை கேட்க மாட்டார்கள். கூறும் ஆலோசனைகளை காது கொடுத்து கேட்க மாட்டார்கள். சின்ன சின்ன குறைகளை கண்டுபிடித்து, அதை சொல்லிக் கொண்டே இருப்பார்கள். உங்கள் வயது, அனுபவம் அல்லது தோற்றத்தை வைத்து உங்களை இகழ்வார்கள். இப்படிப்பட்டவர்கள் ”அசட்டை பண்ணுகின்ற பெலிஸ்தியர்கள்” ஆவார்கள். ஆனால் தேவன் உங்களை அவர்களின் கையிலிருந்து தப்புவித்து, அவர்கள் முன்னிலையில் உங்களை உயர்த்துவார்.
4.சபிக்கின்ற பெலிஸ்தியன் :
தாவீது ஒரு தடியையும், ஐந்து கூழாங்கற்கள் நிரப்பப்பட்ட அடைப்பையும், கவணையும் எடுத்துக்கொண்டு வந்ததைப் பார்த்த கோலியாத், “நீ தடிகளோடு என்னிடத்தில் வருவதற்கு நான் நாயா?” என்று கூறி அவனைச் சபித்தான்.
தாவீதோடு யுத்தம் செய்தால் ஒருவேளை தோற்றுப் போகலாம் என்பதனை அறிந்த பெலிஸ்தியன். யுத்தத்தில் முழு பலத்தோடு வரக்கூடாது என்பதற்காகவும், அதற்கு முன்பாகவே அவனை வீழ்த்த வேண்டும் என்பதற்காகவும் தன் வாயினால் சபித்தான்.
இன்றும் சிலர் நாம் களத்தில் இறங்கினால் வெற்றி பெற்று விடுவோம் என்பதனை அறிந்து களத்துக்கே வரக்கூடாதபடிக்கு முடக்குவதற்காக வாயின் வார்த்தைகளால் சபிப்பார்கள். நீங்கள் வெற்றி பெறக்கூடாது என்பதற்காக நேரடியாகச் செய்ய முடியாததை மறைமுகமாகச் செய்ய முயற்சிப்பார்கள். இவர்களே சபிக்கின்ற பெலிஸ்தியர்கள் ஆவார்கள். ஆனால், கர்த்தர் இப்படிப்பட்டவர்களின் எல்லா தீய வார்த்தைகளிலிருந்தும் உங்களைப் பாதுகாப்பார்.
5.மாந்திரீகம் செய்கின்ற பெலிஸ்தியன்:
நீ தடிகளோடு என்னிடத்தில் வருவதற்கு நான் நாயா என்று சொல்லி, தன் தேவர்களைக் கொண்டு தாவீதைச் சபித்தான் (1 சாமுவேல் 17:43). என்று பரிசுத்த வேதம் கூறுகின்றது. சாதாரணமாக சபிப்பது என்பது வேறு. தன் தேவர்களின் பேரில் சபிப்பது என்பது வேறு.
ஏதோ எரிச்சலினாலும் பொறாமையினாலும், கோபத்தினாலும், வாயின் வார்த்தைகளை சொல்வது சாதாரணமாக சபிப்பது ஆகும். ஆனால், தேவர்களைக் கொண்டு சபிப்பது என்பது மாந்திரீகம் ஆகும். மாந்திரீகம் செய்கின்றவர்கள் தன்னுடைய தேவர்களுக்கு பூஜை போட்டு, அதை அபிஷேகம் செய்து, அசுத்த ஆவிகளை வரவழைத்து, அதற்கு முன்பாக நம்முடைய பெயரை சொல்லி சபித்து அந்த ஆவிகளுக்கு கட்டளை கொடுத்து அனுப்புவார்கள். இது மாந்திரீகம் ஆகும்.
சாதாரணமாக சபித்தும் நம்முடைய வாழ்க்கையில் எந்த பாதிப்பும் வரவில்லை என்றால், துணிகரமாக இந்த காரியங்களை செய்வார்கள். நாம் அழிய வேண்டும் என்பதுதான் அவர்களின் எண்ணம். இவர்கள்தான் இப்படி செய்கின்றவர்கள் மாந்திரீகம் செய்கின்ற பெலிஸ்தியர்கள் ஆவார்கள். இவர்களின் கைக்கும் பரலோக தேவன் நம்மை தப்புவிப்பார்.
எனவே, இந்த மாதத்தில் உங்களுக்கு எதிராக எழும் எல்லா “பெலிஸ்தியர்களின்” கையிலிருந்தும், சூழ்ச்சிகளிலிருந்தும், அநியாயங்களிலிருந்தும், தீய திட்டங்களிலிருந்தும் கர்த்தர் உங்களை நிச்சயமாகத் தப்புவித்து, வெற்றியோடு நடத்துவார். ஆமென்.
குறிப்பு : கடந்த வருடங்களைப்போல இந்த 2026-ம் வருடமும் வேதாகமம் எழுதும் தேர்வு நடத்தப்படுகின்றது. இதில் கொடுக்கப்பட்டுள்ள வேதப்பகுதியை விதிமுறைக்குட்பட்டு பிழையில்லாமல், எந்த ஒரு வசனத்தையும் விடாமல் தெளிவாக எழுதிய முதல் மூன்று பேருக்கு பரிசுகள் வழங்கப்படும். முதல் பரிசு :30,000 ரூபாய், இரண்டாம் பரிசு : 20,000 ரூபாய், மூன்றாம் பரிசு :10,000 ரூபாய் ஆகும். இன்னும் பல பரிசுகளும் உள்ளன. ஆறுதல் பரிசும் உண்டு. மேலும் கலந்துக்கொள்ளும் அனைவருக்கும் E-Certificate வழங்கப்படும். விதிமுறைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த தேர்வு சம்பந்தமான Update –களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள 8608833150 என்ற Whats App எண்ணை உங்கள் மொபைல் போனில் பதிந்து வைத்துக்கொள்ளவும்.
தீர்க்கதரிசன செய்திகள் மற்றும் வேதாகமம் எழுதும் தேர்வு சம்பந்தமான Update- கள் இதுவரை Broadcast Method-மூலமாக ஒவ்வொருவருக்கும் தனி தனியாக Whats App எண்ணுக்கு அனுப்பப்பட்டது. இனி இந்த முறையில் அனுப்புவதற்கு ஒரு செய்திக்கு 78 பைசா கட்டனம் செலுத்த வேண்டும் என்று Whats App நிறுவனம் அறிவித்துள்ளது. எனவே, புதிய வருடத்தில் ஒவ்வொருவருக்கும் தனி தனியாக அனுப்பப்படமாட்டாது. மாறாக புதிதாக ஆரம்பிக்கப்பட்ட Prophetic Words என்ற Whats App Channel – ல் அனுப்பப்படும். அதேபோல் You tube Channel மற்றும் Telegram Channel லும் அனுப்பப்படும். கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து உங்கள் விருப்பப்படி கீழ்கண்ட சேனலை Subscribe செய்து கொள்ளுங்கள்.
மேலும் Prophetic Words Whats App AI Chatbot ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாகவும் மிக விரைவாக தீர்க்கதரிசன செய்திகள் மற்றும் வேதாகமம் எழுதும் தேர்வு சம்பந்தமான Update- களை பெற்றுக்கொள்ளலாம். 2026 ம் வருட தேர்வுகளை பற்றி அறிந்துக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள் https://www.pwmi.in/p/bible-writing-exam-2026.html
PW Whats App AI Chatbot : https://api.whatsapp.com/send?phone=918124804845&text=Hi
Whats App Channel : https://whatsapp.com/channel/0029Va5QjlcCxoAuzjZu7c3c
You tube Channel : https://www.youtube.com/channel/UCIzTPvb01G5b-RVZvsftEJw
Telegram Channel : https://t.me/pwmin
