×

”எனக்கு ஆலோசனை தந்த கர்த்தரைத் துதிப்பேன்;(சங் 16:7)”

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே…

       கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாகட்டும்! இக்கட்டான சூழ்நிலையில் ஆலோசனை தருகின்றவர் கர்த்தர். அவருடைய ஆலோசனைகள் அருமையானவைகள். அவைகளின் தொகையை எண்ணினால் மணலைப்பார்க்கிலும் அதிகமாக இருக்கும்.(சங்கீதம் 139:17,18) நெடுநாட்களாக ஆசீர்வாத தடைகள், திருமணத்தடைகள், குழந்தைபாக்கியத்தடைகள், சொந்தமாக வீடு, வாகனங்கள் வாங்கக்கூடாதப்படிக்கு இருக்கும் தடைகள், மாந்திரீக கட்டுகள், பில்லி சூன்ய கட்டுகள், செய்வினைக்கட்டுகள், பாவக்கட்டுகள், சாபக்கட்டுகள், தலைமுறையாக தொடர்ந்து வரும் சாபக்கட்டுகள். போன்ற பல்வேறு கட்டுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சர்வவல்ல தேவன் தம்முடைய ஊழியக்காரர்கள் மூலமாக ஆலோசனைகளை கொடுத்து, கட்டுகளை உடைத்து ஒரு மெய்யான விடுதலையை தருகின்றார்.

    கட்டுகளினால் பாதிக்கப்பட்டு, சர்வ வல்ல தேவனிடமிருந்து ஒரு மெய்யான விடுதலை பெற்றுக்கொள்ள வேண்டுமென்று காத்திருப்பவர்களுக்கு,  உண்மையான விடுதலையை பெற்றுக்கொடுக்கும் விதமாக தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியத்திலிருந்து  நேரிலும்,    போன் கால் மூலமாகவும், Whats App   மூலமாகவும்  தீர்க்கதரிசன ஜெபத்துடன் கூடிய ஆலோசனைகள் கொடுக்கப்படுகின்றன. பரலோக தேவன் கொடுக்கின்ற இந்த ஆலோசனைகளின் படி கீழ்ப்படிய ஒப்புகொடுத்தால் அற்புதங்களையும் விடுதலையும் பெற்றுக்கொள்வது நிச்சயம்.. மேலும், பரிசுத்த ஆவியானவர் கொடுக்கும் வெளிப்பாட்டின் படி கட்டுகளை உடைத்தும் ஜெபிக்கப்படுகின்றது.    உங்களுக்கு ஏதேனும் ஜெபத்துடன் கூடிய தீர்க்கதரிசன ஆலோசனைகள் தேவையென்றாலும், வெளிப்பாட்டின் படி கட்டுகளை உடைத்து ஜெபிக்க வேண்டுமென்றாலும் முன்பதிவு செய்யுங்கள். 

In-Person Counseling:

      நேரில் வந்து, ஜெபித்து தேவனுடைய தீர்க்கதரிசன ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அனேகர் விரும்புவார்கள். அப்படி நேரில் வருகின்றவர்களுக்கு ஜெபித்து தீர்க்கதரிசன ஆலோசனைகள் கொடுக்கப்படுகின்றன. நான் இந்தியாவில் உள்ள  தமிழ் நாட்டில் தென்காசி மாவட்டத்தில் இருக்கின்றேன். இங்கு நீங்கள் நேரில் வரமுடியுமென்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணுக்கு போன் செய்து விவரங்களை பெற்றுக்கொள்ளுங்கள்.

 Phone Call Counseling: 

      நேரில் வந்து ஆலோசனைகளை பெற முடியாதவர்களுக்கு  போன் கால் மூலமாக ஜெபித்து தீர்க்கதரிசன ஜெபத்தோடுகூடிய  ஆலோசனைகள் கொடுக்கப்படுகின்றது. ஒரு நபருக்கு 15 நிமிடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. எனவே,  கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து உங்கள் தேதி மற்றும் நேரத்தை (Appointment Date and Time).  முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.

    அநேகர் பல பிரச்சனைகளோடு பரிசுத்த ஆவியானவர் கொடுக்கும் ஆலோசனைக்களுக்காக காத்திருப்பதால், உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள நேரத்தில் சரியாக போன்கால் செய்து, உங்களுடைய பிரச்சனைகளுக்கான ஆலோசனைகளை ஜெபத்துடன் கேட்டுக் பெற்றுக்கொள்ளுங்கள். வீனான அல்லது தேவையில்லாத காரியத்தினை பேசி நேரத்தினை வீனாக்காதீர்கள். கொடுக்கப்பட்டுள்ள நேரத்திற்குள்  நீங்கள் Phone செய்து ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளவில்லையென்றால் மறுபடியும் இதே போல்தான் அடுத்த தேதி மற்றும் நேரத்தை (Appointment Date and Time) முன்பதிவு செய்ய வேண்டும்.

       பரிசுத்த ஆவியானவரே உங்கள் பிரச்சினைகளுக்கு ஆலோசனைகளை கொடுக்க முடியும். நாங்கள் வெறும் மண்ணான மனிதர்கள். எனவே,  ஒரு நேரம் Fasting இருந்து அல்லது ஒருமணி நேரமாவது ஜெபத்தில் அமர்ந்திருந்து, உங்கள் விண்ணப்பங்களை தேவ சமூகத்தில் சொல்லிய  பின்பு, ஆலோசனைகளை கேளுங்கள். பரிசுத்த ஆவியானவர் உங்களுடன் பேசுவார்.

    முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து  உங்களுக்கு வசதியான தேதி மற்றும் நேரம் (Time Slot) உள்ளதா என்று பாருங்கள். இருந்தால் அதை கிளிக் செய்து Book  பண்ணுங்கள். இல்லையென்றால் அடுத்த நாளில் உள்ளதா? என்று பாருங்கள். உங்களுக்கு வசதியான நேரத்தை Book  பண்ணுங்கள். CLICK HERE

Whats App Counseling:          

 போன் மூலமாக தொடர்பு கொள்ள முடியாதவர்களுக்கும், மிக அவசரமான காரியத்திற்காக ஜெபிக்க விரும்புகின்றவர்களுக்கு  இப்பொழுது Whats App-ல் Message அல்லது Audio Message  மூலமாக   ஆலோசனைகள் கொடுக்கப்படுகின்றது.  உங்களுக்கு ஏதேனும் ஜெபக்குறிப்புகள் மற்றும் தீர்க்கதரிசன ஆலோசனைகள் தேவையென்றாலும், ஏதேனும் அவசரமான (Emergency) ஜெபக்குறிப்பாக இருந்தாலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து,  உங்கள் ஜெபக்குறிப்புகளை Message அல்லது ஆடியோவாக ரெக்கார்ட் (Audio Record) செய்து அனுப்பவும். நீங்கள் அனுப்பிய   ஆடியோவை கேட்ட பின்பு  பதிலளிக்கப்படும். Click Here

error: Content is protected !!