தீர்க்கதரிசன வாக்குத்தத்த செய்தி
நீங்கள் ஒரு மணி நேரமாவது விழித்திருக்கக் கூடாதா? என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம் சீஷனாகிய பேதுருவை நோக்கிக் கேட்டார் (மத்தேயு 26:40). ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேர ஜெபம் மிகவும் முக்கியமானது. தேவனுடைய பிள்ளைகள் தினமும் ஒரு மணி நேரமாவது ஜெபிக்க வேண்டும். ஏன் ஜெபிக்க வேண்டும்?
கோதுமையை சுளகினால் புடைப்பதுபோல் சீஷர்களைப் புடைப்பதற்கு சாத்தான் அனுமதி கேட்டான். அதற்கு இயேசு கிறிஸ்து அனுமதி கொடுத்தார். ஆனால், அவர்களின் விசுவாசம் ஒழிந்துபோகாதபடி அவர்களுக்காக விண்ணப்பம் செய்தார். இப்போது பேதுருவையும் மற்ற சீஷர்களையும் சோதிப்பதற்கு பிசாசுக்கு அனுமதி கிடைத்தது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் அனுமதி அளித்தார். சோதனை நேரத்தில் பேதுரு எப்படி மறுதலிப்பான் என்பதையும் தீர்க்கதரிசனமாக முன்கூட்டியே கூறினார்.
பின்னர் வழக்கத்தின்படி தம் சீஷர்களைக் கூட்டிக்கொண்டு ஜெபிக்கச் சென்றார். அப்போது அவர் கூறிய ஆலோசனை: “நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு ஜெபியுங்கள்” என்பதாகும். இதையே மத்தேயுவில்: “ஒரு மணி நேரமாவது விழித்திருக்கக் கூடாதா? நீங்கள் சோதனைக்குள் செல்லாதபடிக்கு விழித்திருந்து ஜெபியுங்கள்” என்று கூறினார்.
ஆம், ஒரு மணி நேரம் நாம் ஜெபிப்பது சோதனையில் விழாதபடிக்கு பாதுகாக்கும். அது எந்த சோதனை? தேவன் அனுமதித்ததும், அது எப்படி இருக்கும் என்று முன்கூட்டியே கூறப்பட்ட சோதனைக்குள் நாம் விழாதபடிக்கு காக்கும். ஆம், நிச்சயமாக காக்கும்.
மாந்திரீகம் தாக்குமோ, பில்லி சூனியம் தாக்குமோ, பிசாசு என்னை வஞ்சிப்பானோ, சோதனையில் தோல்வியடைவேனோ என்று நீங்கள் பயப்படலாம். அஞ்சாதிருங்கள். ஒரு மணி நேரம் விழித்திருந்து ஜெபியுங்கள். நீங்கள் சோதனைக்குட்படாமல் ஜெயம் பெறுவீர்கள். தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெறுவது போல ஜெயம் கிடைக்கும்.
ஜெபம் என்பது சாதாரண காரியம் அல்ல. ஜெப நேரம் என்பது சாதாரண நேரமல்ல. அது ஒரு யுத்தக்களம். பிசாசை நேருக்கு நேர் எதிர்க்கும் நேரம். தேவனுடைய பிரசன்னம் வராதபடிக்கு பிசாசு தடுப்பான். “ஜெபிக்க வேண்டாம்” என்ற எண்ணத்தையும் தருவான். எதுவாக இருந்தாலும், அவைகளை எல்லாம் கடந்து ஜெபிக்க வேண்டும். தேவப் பிரசன்னத்திற்குள் நுழைய வேண்டும். அதுவே உண்மையான ஜெபம்.
ஆனால், பல தேவனுடைய பிள்ளைகள் தடைகள் வந்தவுடன் ஜெபிக்காமல் தேவப் பிரசன்னத்தை விட்டு விலகிச் செல்கின்றனர். “நான் பாவி, எனக்கு ஜெபிக்க தகுதி இல்லை” என்று எண்ணி குற்ற உணர்வுக்கு இடம் கொடுக்கின்றனர். இது தவறு. ஜெபத்திற்கு தடைகள் வருவது இயல்பு. ஜெபிக்க முடியாதபடி சோர்வு வருவது நாம் சரியான பாதையில் இருப்பதற்கான அடையாளம். பரிசுத்த ஆவியானவர் வழிநடத்துகிறார் என்பதற்கான சாட்சி.
எனவே, தடைகளைப் பார்த்து சோர்ந்து போகாமல், அவற்றை உடைத்தெறிந்து ஜெபிக்க வேண்டும்.
இன்றைய காலத்தில் மக்கள் பணம், நிலம், தங்கம், தொழில் ஆகியவற்றில் முதலீடு செய்கின்றனர். சிறிய தொகையை முதலீடு செய்து பின்பு பெரிய பலனைப் பெறுகின்றனர். அதுபோல் ஜெபமும் ஒரு முதலீடு ஆகும். நாம் ஜெபிக்க ஜெபிக்க அது பெருகிக் கொண்டே இருக்கும். பின்னர் பல மடங்கு பலன் தரும்.
உதாரணமாக, உங்கள் ஆரோக்கியத்திற்காக தினமும் ஜெபிக்கிறீர்கள். இப்போது நீங்கள் நலமாக இருக்கலாம். ஆனால் எதிர்காலத்தில் எந்த நோயும் வரக்கூடாது என்று ஜெபிக்கிறீர்கள். இது வெறும் ஜெபமல்ல — இது ஒரு முதலீடு. இந்த ஜெபம் ஒரு சொத்தாக மாறும். அவசர காலங்களில், நீங்கள் ஜெபிக்க முடியாத நேரங்களில் கூட, இந்த ஜெபம் பலமாய் செயல்படும்.
எனவே, ஜெபத்தை ஒரு கடமையாக அல்ல, ஒரு முதலீடாகக் காணுங்கள்.
சரி, எப்படி ஜெபிப்பது?
“அந்நிய பாஷையில் பேசுகிறவன் ஆவியினால் இரகசியங்களைப் பேசுகிறான்; அவன் மனுஷரிடத்தில் அல்ல, தேவனிடத்தில் பேசுகிறான்” (1 கொரிந்தியர் 14:2). அந்நிய பாஷை ஜெபத்திற்கு ஒரு வல்ல ஆயுதம். இதற்கு ஒருமனம் மற்றும் ஒரே சிந்தனை அவசியமில்லை. எந்த சூழ்நிலையிலும் ஜெபிக்கலாம்.
வேலை செய்யும்போதும், பயணம் செய்யும்போதும், சத்தமான சூழலிலும் கூட ஜெபிக்கலாம். சினிமா பாடல்களின் சத்தங்களின் நடுவிலும் ஜெபிக்கலாம். இந்த ஜெபமும் தேவனிடம் சேரும். பரிசுத்த ஆவியானவர் நமக்காக விண்ணப்பம் செய்வார்.
ஸ்மார்ட்போன் (Smart phone) இல்லாத மனிதர்களே கிடையாது. இன்று அனைவரிடமும் ஸ்மார்ட்போன் உள்ளது. வயதான தாத்தா முதற்கொண்டு பிறந்த குழந்தைகள் வரை வைத்துள்ளார்கள். பெரிய பெரிய பதவிகளில் இருப்பவர்களும் சின்ன சின்ன வேலை செய்கின்றவர்களும் வைத்துள்ளார்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் Social media-வில் நேரத்தை செலவழிக்கின்றார்கள். Shorts, Reels என்று அங்கு தன் கவனத்தை செலுத்துகின்றார்கள். அப்படி கவனத்தைச் செலுத்தாமல் கிடைப்பது ஐந்து நிமிடமாக இருந்தாலும் அதில் ஒரு ஜெபக்குறிப்புக்கு ஜெபிக்கலாம். ஒரு நாளில் 12 முறை ஐந்தைந்து நிமிடம் ஒதுக்கினாலே போதும் ஒரு மணி நேரம் கிடைத்துவிடும். ஒரு நாளில் 12 முறை ஐந்தைந்து நிமிடம் அந்நிய பாஷை பேசினாலே போதும் ஒரு மணி நேரம் கிடைத்து விடும். எனவே, எனக்கு நேரமில்லை என்று சொல்லக்கூடாது. ஒரு மணி நேரம் ஜெபிக்க நேரமில்லை என்று காரணம் சொல்லக்கூடாது. எப்படிப்பட்ட தடைகள் ஜெபத்திற்கு வந்தாலும் அதை உடைத்தெறிந்து ஜெபியுங்கள். பரலோக தேவன் உங்களை ஆசீர்வதிப்பார்.
சரி எப்படி ஆசீர்வதிப்பார்? என்னென்ன ஆசீர்வாதங்களைத் தருவார்?
கர்த்தர் உன்னை வாலாக்காமல் தலையாக்குவார் நீ கீழாகாமல் மேலாவாய். (உபாகமம் 28:14)
இந்த மாதத்திலிருந்து தினமும் ஒருமணி நேரமாவது ஜெபிக்க உங்களை அர்பணிக்கும்போது உங்களை வாலாக்காமல் தலையாக்குவார் என்று வாக்கு கொடுத்துள்ளார். நீங்கள் தலைமை பொருப்பில் இருப்பீர்கள். தலைமைப்பண்பிற்கு ஏற்ற தேவையான தோற்றம் கிடைக்கும். இதுவரைக்கும் உங்கள் வார்த்தைகள் அசட்டைப்பண்ணப்பட்டதாக இருந்திருக்கும். உங்கள் ஆலோசனைகளை யாரும் காதுக்கொடுத்து கேட்டிருக்கமாட்டார்கள். ஆனால், தேவன் உங்களை தலைமையாக்கும்போது நீங்கள் பேசும் வார்த்தைகள் கனப்படுத்தப்படும். உங்கள் ஆலோசனைகள் கேட்கப்படும். வீட்டிலும் வேலை ஸ்தலத்திலும் மதிப்பு, மரியாதை கிடைக்கும். முகத்தை பிரகாசிக்கச் செய்யும் அபிஷேகம் கிடைக்கும். வருமானங்கள் ஆசீர்வதிக்கப்படும். இரட்டிப்பான நன்மைகளைப் பெறுவீர்கள்.
தினமும் ஒரு மணி நேரமாவது விழித்திருந்து ஜெபிக்கும் போது இந்த ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்வீர்கள். எனவே, தினமும் ஒரு மணி நேரமாவது ஜெபியுங்கள். பரலோக தேவன் உங்களை ஆசீர்வதிப்பார். ஆமென்.
குறிப்பு : கடந்த வருடங்களைப்போல இந்த 2026-ம் வருடமும் வேதாகமம் எழுதும் தேர்வு நடத்தப்படுகின்றது. இதில் கொடுக்கப்பட்டுள்ள வேதப்பகுதியை விதிமுறைக்குட்பட்டு பிழையில்லாமல், எந்த ஒரு வசனத்தையும் விடாமல் தெளிவாக எழுதிய முதல் மூன்று பேருக்கு பரிசுகள் வழங்கப்படும். முதல் பரிசு :30,000 ரூபாய், இரண்டாம் பரிசு : 20,000 ரூபாய், மூன்றாம் பரிசு :10,000 ரூபாய் ஆகும். இன்னும் பல பரிசுகளும் உள்ளன. ஆறுதல் பரிசும் உண்டு. மேலும் கலந்துக்கொள்ளும் அனைவருக்கும் E-Certificate வழங்கப்படும். விதிமுறைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த தேர்வு சம்பந்தமான Update –களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள 8608833150 என்ற Whats App எண்ணை உங்கள் மொபைல் போனில் பதிந்து வைத்துக்கொள்ளவும்.
தீர்க்கதரிசன செய்திகள் மற்றும் வேதாகமம் எழுதும் தேர்வு சம்பந்தமான Update- கள் இதுவரை Broadcast Method-மூலமாக ஒவ்வொருவருக்கும் தனி தனியாக Whats App எண்ணுக்கு அனுப்பப்பட்டது. இனி இந்த முறையில் அனுப்புவதற்கு ஒரு செய்திக்கு 78 பைசா கட்டனம் செலுத்த வேண்டும் என்று Whats App நிறுவனம் அறிவித்துள்ளது. எனவே, புதிய வருடத்தில் ஒவ்வொருவருக்கும் தனி தனியாக அனுப்பப்படமாட்டாது. மாறாக புதிதாக ஆரம்பிக்கப்பட்ட Prophetic Words என்ற Whats App Channel – ல் அனுப்பப்படும். அதேபோல் You tube Channel மற்றும் Telegram Channel லும் அனுப்பப்படும். கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து உங்கள் விருப்பப்படி கீழ்கண்ட சேனலை Subscribe செய்து கொள்ளுங்கள்.
மேலும் Prophetic Words Whats App AI Chatbot ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாகவும் மிக விரைவாக தீர்க்கதரிசன செய்திகள் மற்றும் வேதாகமம் எழுதும் தேர்வு சம்பந்தமான Update- களை பெற்றுக்கொள்ளலாம். 2026 ம் வருட தேர்வுகளை பற்றி அறிந்துக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள் https://www.pwmi.in/p/bible-writing-exam-2026.html
PW Whats App AI Chatbot : https://api.whatsapp.com/send?phone=918124804845&text=Hi
Whats App Channel : https://whatsapp.com/channel/0029Va5QjlcCxoAuzjZu7c3c
You tube Channel : https://www.youtube.com/channel/UCIzTPvb01G5b-RVZvsftEJw
Telegram Channel : https://t.me/pwmin
