யோபு என்ற மனிதன் கிழக்கத்திய புத்திரர் எல்லாரிலும் பெரியவனாயிருந்தான் என்று யோபு 1:3-ல் வாசிக்கின்றோம். உலக வாழ்க்கையிலும், ஆவிக்குரிய வாழ்க்கையிலும் உயர்வை பெறவேண்டும் என்பதும், பெரியவர்களாக மாறவேண்டும் என்பதும், நம் அநேகருடைய விருப்பமாகவும், வாஞ்சையாகவும் இருக்கும். உயர்வைத் தருவதாக பரலோகதேவனும் வாக்குத்தத்தங்கள் கொடுத்திருப்பார். நிச்சயமாக உயர்வை உங்களுக்கு தருவார். ஆனால், இன்றுவரை உயர்வு என்பது இல்லாமல் இருக்கலாம். இந்தச் செய்தியில் உலகவாழ்க்கையிலும் ஆவிக்குரிய வாழ்க்கையிலும் உயர்வைப் பெற என்ன என்ன செய்ய வேண்டும் என்பதனையும், யோபு எப்படி எல்லாரையும்விட பெரியவனானான் என்பதையும் குறித்து கொஞ்சம் விரிவாக தியானிக்கலாம். ஜெபத்துடன் வாசியுங்கள். பரலோக தேவன் உங்களுடன் பேசுவார்.
யோபு ஊத்ஸ் தேசத்தில் வாழ்ந்த ஒரு மனிதன். உத்தமனும், சன்மார்க்கனும் தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகினவனுமாயிருந்தான். இவனுடைய உத்தமத்தைப் பார்த்த தேவனானவர் அவனை உயர்த்த சித்தம் கொண்டார். ஒரு வழியில் மாத்திரம் அவனுக்கு வருமானம் வந்தால் பெரியவனாக மாறமுடியாது. ஏனென்றால், அந்த வழியை எளிதாக பிசாசு அடைப்பான். எனவே பல வழிகளில் வருமானத்தினை கொடுத்தார்.
ஏழாயிரம் ஆடுகளைக் கொண்ட ஆட்டு மந்தை இருந்தது. அதன் மூலமாக ஒரு பங்கு வருமானம் கிடைத்தது. மூவாயிரம் ஒட்டகங்கள் உள்ள மந்தை இருந்தது அதன்மூலம் ஒரு பங்கு வருமானம் கிடைத்தது. 500 ஏர் மாடுகள் உள்ள மந்தை ஒன்று இருந்தது. அதன் மூலம் ஒரு பங்கு வருமானம் கிடைத்தது. ஐந்நூறு ஏர்மாடுகள் உள்ள ஒரு மந்தை இருந்தது. அதன்மூலம் ஒரு பங்கு வருமானம் கிடைத்தது. திரளான வேலைக்காரர்களும் அவனுக்கு இருந்தார்கள். இப்படி பரலோக தேவன் பலவழிகளில் வருமானத்தைக் கொடுத்து அவனை பெரியவனாக்கினார். ஆதலால் யோபு கிழக்கத்தியப் புத்திரர் எல்லாரையும்விட மிகவும் பெரியவனாக இருந்தான்.
தேவனுடைய பிள்ளைகளை ஆசீர்வதித்து வருமானத்தினைத் தந்து உயர்வைத் தரவேண்டும் என்பது தேவனுடைய விருப்பம். ஒரு வழியில் மாத்திரம் வருமானத்தை தந்தால், எளிதாக பிசாசினால் அதை தடுக்க முடியும். எனவே, பலவழிகளில் பல்வேறு தொழில்கள் மூலமாக வருமானத்தினை தருவார். அப்படி பல தொழில்களை செய்யும் போது அவற்றையெல்லாம் ஆசீர்வதித்து உயர்வைத் தருவார். எல்லாரையும் விட பெரியவர்களாக மாறமுடியும்.
அதேப்போல் ஆவிக்குரிய வாழ்க்கையிலும் உயர்வைப் பெறுவது அத்தியாவசமான ஒன்றாகும். தேவபிரசன்னத்தில் அதிகநேரம் சஞ்சரிப்பவர்கள் மாத்திரமே உயர்வைப் பெறமுடியும். ஆவிக்குரிய அனுபவங்களைப் அதிகமாக பெற்றுக்கொள்ள முடியும். தேவப்பிரசன்னத்தில் சஞ்சரிக்க ஜெபம். வேதவாசிப்பு, ஆராதனை, ஜெபநடை, அமைதி ஜெபம், கட்டுகளை உடைக்கும் ஜெபம் என்று பல வழிகள் உள்ளன. அவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும். மாறாக, ஒரே ஒரு வழியை மாத்திரம் கொண்டு தேவ பிரசன்னத்தில் சஞ்சரிப்பது கூடாதக்காரியம். ஏனெனில், அதை பிசாசு எளிதாக அடைத்து விடுவான். எனவே பல்வேறு வழிகளைக் கற்றுக்கொண்டு தேவசமூகத்தில் சஞ்சரிக்கும் போது தேவபிரசன்னம் நிரப்பும். ஆவிக்குரிய உயர்வையும் பெற்றுக்கொள்வோம்.
இந்த தீர்க்கதரிசனசெய்தியை கருத்தாக வாசிக்கின்ற தேவனுடைய பிள்ளைகளே பல வழிகளில் வருமானம் வர வேண்டும் என்பதற்காக ஜெபியுங்கள். அதேப்போல் பல வழிகளில் தேவனோடு சஞ்சரிக்கும் முறைகளையும் அறிந்து கொள்ளுங்கள். உலக வாழ்க்கையிலும் ஆவிக்குரிய வாழ்க்கையிலும் உயர்வையும், பணத்தையும், ஆசீர்வாதத்தையும் பெற்றுக் கொள்வது நிச்சயம்.
Switch To ENGLISH
பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு மகிமை உண்டாகட்டும்…. இந்தச் தீர்க்கதரிசன செய்தியும் ஆலோசனையும் உங்களுக்கு பிரயோஜனமாகவும் ஆசீர்வாதமாகவும் இருந்தால் கைகளை உயர்த்தி முழு மகிமையும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கே செலுத்துங்கள். இதை திரும்ப திரும்ப தியானியுங்கள், நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும். மேலும் தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்களுக்காக இரண்டு நிமிடங்கள் ஜெபியுங்கள். இந்த ஊழியத்தினைப்பற்றி அறிந்துக்கொள்ளவும், ஜெபத்தேவைகள் மற்றும் ஜெப ஆலோசனைகளுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள். CLICK HERE
Share this content:










