×

அபகரிக்க விடாதே…

சூனேம் ஊராளாகிய அபிஷாகைக் எனக்கு அவர் விவாகம் பண்ணி கொடுக்க, அவரோடு பேச வேண்டும் என்று சொல்லி பத்சேபாளை இராஜாவாகிய சாலொமோனிடத்தில் அதோனியா அனுப்பினான். பத்சேபாள் என்பவள் சாலொமோனின் தாய் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.  அவள் அதோனியாவுக்காக சாலொமோனிடத்தில் வந்து அபிஷாகைக் கேட்டாள். அப்பொழுது சாலொமோன் இராஜா இந்த வார்த்தையை தன் பிராணனுக்கு சேதமாகச் சொல்லாதிருந்தால்,  தேவன் அதற்குச் சரியாகவும்  அதற்குச் அதிகமாகவும் செய்யக்கடவர் என்று கர்த்தர் மேல் ஆணையிட்டான். 

 அதோனியா தந்திரமாக இந்த வார்த்தைகளை சொல்லிருந்தான். இதை பரலோக தேவன் வெளிப்படுத்திருந்தார். உடனே சாலொமோன் இராஜா இன்றைக்கு அதோனியா கொலையுண்பான் என்று என்னை திடப்படுத்தினவரும்,  என்னை என்  தகப்பனாகிய தாவீது சிங்காசனத்தில் வீற்றிருக்கிறபண்ணி,  தாம் சொன்னபடி எனக்கு வீட்டைக் கட்டுவித்தவருமாகிய  ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன் என்று சொல்லி,  இராஜாவாகிய சாலொமோன் யோய்தாவின் குமாரன் பெனாயாவுக்கு கட்டளை கொடுத்து அவனை அனுப்பினான்.  இவன் அவன்மேல் விழுந்து அவனை கொன்று போட்டான். (2 இராஜாக்கள் 2: 24-25)

     ஏன் சாலொமோன் இராஜா அதோனியாவை கொன்று போட்டான்?  கொன்று போடுமளவுக்கு அவன்  என்ன தப்பு செய்தான்?           சூனேம் ஊராளாகிய அபிஷாகைக் தனக்கு மனைவியாக கேட்டது ஒரு பாவமா?  இதில் என்ன இரகசியம் அடங்கியுள்ளது  என்பதனைக் குறித்து இந்த செய்தியில் விரிவாக தியானிக்கலாம். ஜெபத்துடன் வாசியுங்கள் பரிசுத்த ஆவியானவர் உதவி செய்வார்.

    தாவீது ராஜா வயது சென்று விர்த்தாப்பியனானபோது, அவனுக்கு பணிவிடை செய்யவும், மடியில் படுத்துக்கொண்டு அவனுக்கு அனல் உண்டாக்கவும், ஒரு கன்னிப் பெண்ணை தேடுவோம் என்று அவனுடைய ஊழியக்காரர்கள் சொன்னார்கள். அதன்படி சூனேம் ஊராளாகிய அபிஷாகைக் கண்டு தாவீதினிடத்தில் கொண்டு வந்தார்கள். அவள் வெகு அழகுள்ளவளாக இருந்தாள்.  இராஜாவுக்கு உதவியாக இருந்து அவனுக்கு பணிவிடைச் செய்தாள்.  கிட்டத்தட்ட தாவீது ராஜாவின் மனைவியாகத்தான் இருந்தாள். (1 இராஜாக்கள் 1: 1-4)

    கணவன் மீது என்ன அபிஷேகம் தங்கி இருக்குமோ அதே அபிஷேகம்தான் மனைவியின் மீதும் தங்கி இருக்கும். ஏனென்றால், இருவரும் ஒரே மாம்சமாக இருக்கின்றார்கள்.(ஆதியாகமம் 2:24) தாவீது இராஜாவின் மீது இஸ்ரவேலை ஆளும் இராஜாவுக்கான அபிஷேகம் இருந்தது. அதே அபிஷேகம் அவனுடைய எல்லா மனைவிகள், எல்லா மறுமனையாட்டிகள் மீதும் இருந்தது.  அதே அபிஷேகம்தான் சூனேம் ஊராளாகிய அபிஷாகை மேலும் இருந்தது.

  பரிசுத்த வேதத்தில் இஸ்ரவேலின் முதல் இராஜாவாகிய சவுல் மரித்த பின்பு அவனுடைய மறுமனையாட்டியாகிய ரிஸ்பாள் என்பவளை அப்னேர் தனக்கு எடுத்துக் கொண்டான். சவுல் மீது இராஜாக்களுக்கான அபிஷேகம் இருந்தது. அதே அபிஷேகம் அவனுடைய மறுமனையாட்டி மீதும் இருந்தது.  இப்பொழுது அவனுடைய மறுமனையாட்டியை அப்னேர் எடுத்துக் கொண்டதினிமித்தம் அந்த அபிஷேகம் அவனுக்குள் சென்றது. இதனால்தான் அப்னேர் சவுலின் குடும்பத்தில் பலத்தவனான். இஸ்ரவேலின் இராஜாவாக இருந்து சவுலின் குமாரன் இஸ்போசேத்தை கூட அவன் ஆளுகை செய்தான்.( 2 சாமுவேல் 3: 6,7)

   தாவீதுக்கும் ஆகீத்திற்கும் பிறந்த அதோனியா என்பவன் நான்  இராஜா  ஆவேன் என்று சொல்லி தன்னைத்தான் உயர்த்தினான்.  குதிரைவீரனையும் தனக்கு முன் ஓடும் ஐம்பது கால் ஆட்களையும் சம்பாதித்தான்.  அவனுக்கு படைத்தளபதியாக இருந்த யோவாப் மற்றும் ஆசாரியனாகிய அபியத்தாரும்   ஆலோசனைச் சொன்னார்கள்.          (1இராஜாக்கள் 1:7) ஆனால் இராஜ்ஜியபாரம் அவனை விட்டு தாண்டி அவனுடைய சகோதரனாகிய சாலொமோன் கைக்கு  சென்றது.  அவனுடைய ஆசை நிறைவேறவில்லை. (1இராஜாக்கள் 2:15)

  தீர்க்கதரிசிகள் ஆழமான இரகசியங்களை அறிந்தவர்கள்.   அவனுக்கு ஆலோசனை சொன்ன தீர்க்கதரிசிகள் ஒரு தந்திரமான யோசனையை சொன்னார்கள்.  அது என்ன?  ”நீ உன் தகப்பனுக்கு மனைவியாக இருந்து, பணிவிடை செய்த அபிஷாகை அவனிடத்தில் கேள்.  அவள் மீது உன் தகப்பனாகிய தாவீதின் மேல் உள்ள இராஜாக்களுக்கான அபிஷேகம் இருக்கும்.   அவளை நீ மனைவியாக்கிக் கொண்டால் அந்த அபிஷேகம் உன் மேல் வந்து தங்கும்.  இதனால் நீ பலத்தவனாக மாறலாம்.  உன் சகோதரனாகிய  சாலொமோனை எதிர்த்து நின்று வெற்றிப்பெற்று இராஜாவாகவும் மாறலாம் என்று சூதான ஆலோசனை சொன்னார்கள்.

          இந்த ஆலோசனையின்படி சென்ற அதோனியா நேரடியாக சாலொமோனிடம் செல்லாமல்,  அவனுடைய தாயாகிய பத்சேபாளிடம் சென்று அபிஷாகை எனக்கு  விவாகம்பண்ணித் தரும்படி சாலொமோனிடம் கேட்டுச் சொன்னான். இந்த இரகசியம் தெரியாத பத்சேபாளும் சாலொமோனிடத்தில்  போய் கேட்டாள்.  ஆனால்,  சாலொமோனை திடப்படுத்தின தேவன் அவனுக்கு இந்த சூழ்ச்சிகளை வெளிப்படுத்தினார்.  இதனால் அதோனியா கொலை செய்யப்பட்டான்.

  இந்தச் செய்தியில் இருந்து பரிசுத்த ஆவியானவர் நமக்கு கற்றுக் கொடுக்கும் ஆழ்ந்த இரகசியம் என்னவென்றால், கணவன்-மனைவி இருவரும் ஒரே மாம்சமாக இருக்கின்றார்கள் கணவன் மீது என்ன அபிஷேகம் இருக்கின்றதோ அதே அபிஷேகம் மனைவி மீதும் இருக்கும்.  மனைவி மீது என்ன அபிஷேகம் இருக்கின்றதோ அதேதான் கணவன் மீதும் இருக்கும்.  எனவே கணவனையோ அல்லது மனைவியையோ அபகரிக்க நினைக்கின்றவர்கள் ஏதோ ஒரு மாம்சத்தை மட்டுமல்ல அவர்களுக்குள் இருக்கிற அபிஷேகத்தையும் அபகரிக்க நினைக்கின்றார்கள் என்பதுதான் உண்மை.

 எனவே, தேவனுடைய பிள்ளைகள் தன்னுடைய துணையை யாரும் அபகரித்துக் கொள்ளாதபடிக்கு பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.  இது அபிஷேகத்தினை பாதுகாப்பதற்கு சமம் ஆகும்.

Switch To ENGLISH   

பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கு  மகிமை உண்டாகட்டும்…. இந்தச் தீர்க்கதரிசன செய்தியும் ஆலோசனையும் உங்களுக்கு பிரயோஜனமாகவும் ஆசீர்வாதமாகவும் இருந்தால் கைகளை உயர்த்தி முழு மகிமையும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவருக்கே செலுத்துங்கள். இதை திரும்ப திரும்ப தியானியுங்கள், நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அதிகமாக SHARE செய்யுங்கள். அது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும். மேலும் தீர்க்கதரிசன வார்த்தைகள் ஊழியங்களுக்காக இரண்டு நிமிடங்கள் ஜெபியுங்கள். இந்த ஊழியத்தினைப்பற்றி அறிந்துக்கொள்ளவும், ஜெபத்தேவைகள் மற்றும் ஜெப ஆலோசனைகளுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள். CLICK HERE

 

Share this content:

1 comment

comments user
wk777

I enjoyed reading this article. Thanks for sharing your insights.

Post Comment

error: Content is protected !!